இனி விண்வெளிக்கே டூர் போகலாம்.. சீனா போட்ட பிளான்.. எல்லாம் சரி அந்த டிக்கெட் விலையை கேட்டா தான் தலை சுத்துது..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகி வருகிறது அண்டை தேசமான சீனா. இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன. அடுத்த சில ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அனுப்பும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்கிறார்கள் சீன ஆராய்ச்சியாளர்கள்.

Advertising
>
Advertising

சுற்றுலா செல்வது பலருக்கும் பிடிக்கும். இரைச்சல், அலுவலக பணி என அன்றாட வாழ்க்கையில் இருந்து விலகி வெகுதூரம் சென்று மனதை உற்சாகமாக்க பலரும் விருப்பப்படுவது உண்டு. ஆனால், விண்வெளிக்கே சுற்றுலா சென்றால்? உண்மைதான் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது அண்டை தேசமான சீனா.

விண்வெளி சுற்றுலா

சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) 2025 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக பயணிகளிடம் இருந்து $287,200 முதல் $430,800 வரை வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து பேசியுள்ள மூத்த ராக்கெட் விஞ்ஞானி மற்றும் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட ராக்கெட் நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனர் யாங் யிகியாங் மூன்று விதமான விண்வெளி பயணம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

விண்வெளி சுற்றுலா விமானங்கள் ஜெஃப் பெசோஸ் தலைமையிலான ப்ளூ ஆரிஜின் விமானத்தை போலவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று கார்மென் கோட்டைத் தொட்டு பின்னர் பூமிக்கு திரும்பும். பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்தை கார்மன் கோடு என்கிறார்கள் ஆராய்ச்சியார்கள். அந்த கோட்டில் இருந்து விண்வெளி துவங்குகிறது.

போட்டி

சீனா சுற்றுலா விமானங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தியாவும் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனர் பெஸோஸ், எலான் மஸ்க் ஆகிய தொழில்துறை ஜாம்பவான்கள் ஏற்கனவே விண்வெளி சுற்றுலா துறையில் கால்பதித்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் உலக நாடுகள் பலவும் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன. எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலா கடுமையான போட்டிகளை கொண்ட துறையாக மாற வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

TOUR, SPACE, CHINA, விண்வெளி, சுற்றுலா, சீனா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்