"எல்லோருக்கும் இரண்டு மடங்கு சம்பளத்தை Increase பன்றோம்".. பிரபல நிறுவனம் வெளியிட்ட தகவல்.. திக்குமுக்காடிப்போன ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்தை சுமார் இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அடுத்த 4 மாசத்துக்கு Night தான்.. சூரியனயே பார்க்க முடியாது.. பூமியில இப்படி ஒரு இடமா?

மைக்ரோசாஃப்ட்

உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் நிறுவிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது உலகமெங்கிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திறமையான ஊழியர்களை தக்க வைக்க அவர்களது ஊதியத்தை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்த இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். இது பலரையில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே, ஐடி நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள, சம்பள உயர்வு, விடுமுறைகள், சொகுசு கார் ஆகியவற்றை வழங்குவதை வாடிக்கையாக்கிவிட்டன. அந்த வரிசையில், தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இந்த முடிவை அறிவித்துள்ளது. தங்களது ஊழியர்கள் ராஜினாமா செய்வதை தடுக்கும் விதமாக இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக சத்யா நாதெள்ளா குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

இதுகுறித்து அவர் பேசுகையில்,"நமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருவதால் நம் திறமை வாய்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து அதிக டிமாண்ட் இருப்பதை பார்க்கிறோம். தலைமை குழுவை சேர்ந்தவர்களின் செயல்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் உண்டு. அதற்காக நான் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே உங்களில் ஒவ்வொருவரிலும் நாங்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்கிறோம்”  எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளவில் தங்களது மெரிட் பட்ஜெட்டை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ள நாதெள்ளா, ஒவ்வொரு நாட்டிலும் சேகரிக்கப்படும் தரவு விவரங்களின் அடிப்படையில் இது மாறுபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பொது மேலாளர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிற உயர் நிர்வாகிகளுக்கு இந்த சம்பள உயர்வு பொருந்தாது எனவும் நாதெள்ளா தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் தனது கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அதிகபட்ச அடிப்படை சம்பளத்தை 160,000 டாலரில் இருந்து 350,000 டாலராக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

MICROSOFT, MICROSOFT CEO, CEO SATYA NADELLA, மைக்ரோசாஃப்ட், ஊழியர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்