கிரிப்டோகரன்சிக்கு புதிய ரூல்ஸ்! சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட தகவல்.. உற்றுநோக்கும் உலக நாடுகள்
முகப்பு > செய்திகள் > வணிகம்கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் மத்திய வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள சம்பவம் மற்ற நாடுகளை திரும்பிபார்க்க வைத்துள்ளது.
தற்போது உள்ள நவீன உலகில் அனைவரது கவனமும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் பக்கம் திரும்பியுள்ளது. இந்த கிரிப்டோகரன்சி சில்லறை முதலீட்டாளர்களை அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதாக பலர் கூறுகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தும் விதமாக சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) திங்களன்று வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சிறந்த முன்னோடி:
கிரிப்டோகரன்சி செயல்பாடுகளை பொறுத்தவரை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி நிறுவனங்களுக்கு தெளிவான ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு சூழல்கள் சாதகமாக உள்ளதால் எந்த சிக்கல்களும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மேலும் சிங்கப்பூர் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும் போது கிரிப்டோகரன்சி நிறுவங்களுக்கு முறையான உரிம கட்டமைப்புகளை உருவாக்குவதில் சிறந்த முன்னோடியாகவும் உள்ளது.
மிகவும் ஆபத்து:
கிரிப்டோகரன்சி எனும் இந்த ஆன்லைன் வர்த்தகம் பல சாதகமான விஷயங்களை கொண்டிருந்தாலும், இதில் இருக்கும் ஆபத்து குறித்து சிங்கப்பூர் நகர-மாநில அதிகாரிகள் டிஜிட்டல் பேமெண்ட் டோக்கன்கள் (DPT) அல்லது கிரிப்டோகரன்சியில் வர்த்தகம் செய்வது மிகவும் ஆபத்தானது மற்றும் பொதுமக்களுக்கு ஏற்றதல்ல என தொடந்து எச்சரித்து வருகின்றனர்.
விளம்பரப்படுத்த கூடாது:
மேலும், சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, சிங்கப்பூரில் உள்ள பொதுப் பகுதிகளில் DPT (digital payment tokens) சேவைகளை சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் அல்லது பொதுமக்களுக்கு DPT சேவைகளை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் போன்றவற்றில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது எனவும் வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் தங்களது கிரிப்டோகரன்சி அறிவிப்புகள் குறித்து தங்களது சொந்த வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் மட்டுமே விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலை செய்ய வேண்டும் எனவும் சிங்கப்பூர் நாணய ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மொத்தமா சோலிய முடிச்சிட்டாங்க.. செம ஃபார்மில் வடகொரிய ஹேக்கர்கள்! பயனாளர்கள் கடும் அதிர்ச்சி
- 'அந்த' நாட்டுல இருந்து தான் வர்றீங்களா...? 'அப்போ உங்களுக்கு குவாரண்டைன் வேண்டாம்...' - ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு...!
- இந்தியாவில் விரைவில் வருகிறது டிஜிட்டல் கரன்சி.. ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்..?
- 50 வயசு ஆச்சா...? 'இல்லன்னா அப்படியே ஓடி போயிடுங்க...' இந்த 'மதுவில்' அப்படி என்ன ஸ்பெஷல்...? 'ஆஹா... வாங்க முடியலையே...' - கலக்கத்தில் 'இளம்' மதுப்பிரியர்கள்...!
- தமிழகத்தில் வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மருத்துவ வல்லுநர் குழு!
- Video : "என்னடா சொல்றீங்க?, உண்மையாவா??..." '2' மணி நேரத்துக்கு மேல் 'ஆன்லைன்' க்ளாஸ் எடுத்த 'பேராசிரியர்'... இறுதியில் தெரிஞ்ச 'உண்மை'.. பாவம்யா 'மனுஷன்'!!
- 'தாலியின் ஈரம் கூட இன்னும் காயல'... 'என் காதல் மனைவி எனக்கு வேணும்'... 'கதறிய கிரிக்கெட் வீரர்'... பரபரப்பு புகார்!
- 'இனி அப்போ அந்த பயமில்லாம சாப்டலாம்???'... 'NON-VEG உணவு சந்தையில் புதிய திருப்புமுனை?!!'... 'உலகிலேயே முதல்முறையாக அதிரடி முடிவெடுத்துள்ள நாடு!!!'...
- 'நோயே பரவாதப்போ'... 'இதுமட்டும் எப்படி சாத்தியம்???'... 'அதுவும் பிறக்கும்போதே'... 'வியப்பில் மருத்துவர்கள்!!!'...
- 'என்ன பசங்களா... லாக்டவுன் நல்லா இருந்துச்சா?.. ஸ்கூல், காலேஜுக்கு போவோமா?'.. 'காலேஜ் திறந்ததும்... தியேட்டரும் திறக்கணும்ல!?'.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!