"ரொம்ப மோசமா Feel பண்றேன்" .. எலான் மஸ்க் போட்ட புதிய திட்டம்..நடுங்கிப்போன ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்திலிருந்து 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | “நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.
பணிநீக்கம்
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் நிர்வாகிகளுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேற்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், பொருளாதாரம் குறித்து மிகுந்த கவலையில் உள்ளதாகவும் அதனால் டெஸ்லாவில் பணியாற்றும் ஊழியர்களில் 10 சதவீதமானோரை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும் மேலும் உலகம் முழுவதிலும் இருந்து டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய ஆட்களை தேர்வு செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார் மஸ்க். இது அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மெயில்
கடந்த புதன்கிழமை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பியதாக சொல்லப்பட்ட மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில்,"வீட்டிலிருந்தே இனி ஊழியர்கள் வேலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. டெஸ்லா ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய விரும்பினால் வாரத்திற்கு குறைந்தது 40 மணிநேரம் டெஸ்லா முதன்மை அலுவலகத்திற்கு வந்து பணிபுரியவேண்டும். இல்லையென்றால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்" என மஸ்க் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால் கவலையில் இருப்பதாக கூறியுள்ள மஸ்க், டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்த 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | ‘என்னய்யா ஒரே மர்மமா இருக்கு’.. தானாக பின்னால் வந்த சைக்கிள் ரிக்சா.. திகில் வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இதைச் செய்யுங்க.. இல்லைன்னா வேலையைவிட்டு போய்டுங்க"..சீரியஸான எலான் மஸ்க்.. என்ன ஆச்சு?
- "டெஸ்லா இந்தியாவுக்கு வரணும்னா".. கண்டிஷன் போட்ட மஸ்க்.. OLA நிறுவன CEO போட்ட 'பளீர்' கமெண்ட்.. வைரலாகும் ட்வீட்..!
- இந்தியாவுல எப்போ டெஸ்லா, ஸ்டார்லிங் வரும்?.. எலான் மஸ்க் சொன்ன பதில்.. அதிர்ந்துபோன நெட்டிசன்கள்..வைரல் ட்வீட்..!
- Tesla-வில் வேலை.. Twitter-ல் விளம்பரம் செய்த எலான் மஸ்க்.. கவனம் பெறும் டுவிட்..!
- "24 மணிநேரமும் அதுதான் மண்டைல ஓடிட்டே இருக்கு"..கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த 'தெறி' பதில்..!
- முன்னாடி எலான் மஸ்க்.. இப்போ மார்க் சக்கர்பர்க்.. அடுத்தடுத்து வச்ச டார்கெட்..19 வயசு ஹேக்கரால் வந்த புதிய சிக்கல்..!
- “இந்த லிஸ்ட்டை சொல்ற வரை Twitter-ஐ வாங்க மாட்டேன்”.. திடீர் ட்விஸ்ட் வச்ச எலான் மஸ்க்..!
- "ட்விட்டரை இப்போதைக்கு வாங்கல".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் ட்வீட்.. காரணம் இதுதானா?
- ட்ரம்ப் மீதான ட்விட்டரின் தடை நீக்கம் பெறுமா? ”… அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க்
- "உங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா.. ட்விட்டரை நான் வச்சுக்கவா?" யூடியூப் பிரபலத்தின் கேள்விக்கு எலான் மஸ்க் கொடுத்த 'தெறி' பதில்..!