'ஐபோன் Users 'மைண்ட் வாய்ஸ்'...'இப்போ தான் எங்க மனசுல இருக்குற பாரம் எல்லாம் இறங்கிருக்கு'... அப்படி ஒரு சோதனையை சந்தித்த ஆப்பிள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இன்றைய இளசுகளில் பலர் நிச்சயம் ஐபோன் ஒன்றை வாங்கி விட வேண்டும் என்பது அவர்களின் பிரதான எண்ணமாக இருக்கும்.

'ஐபோன் Users 'மைண்ட் வாய்ஸ்'...'இப்போ தான் எங்க மனசுல இருக்குற பாரம் எல்லாம் இறங்கிருக்கு'... அப்படி ஒரு சோதனையை சந்தித்த ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு மார்க்கெட்டில் எப்போதுமே தனி வாடிக்கையாளர்கள் உண்டு. அதன் விலை அதிகமாக இருந்தாலும் ஐபோனை நிச்சயம் வாங்கி விட வேண்டும் என எண்ணுபவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வகை மாடல்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது ஐபோன் 12 மாடல்களில் சார்ஜர் மற்றும் ஹெட்போன் இருக்காது என ஆப்பிள் நிறுவனம் சொல்லி இருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மின் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் ஆப்பிள் இதைச் செய்வதாகத் தெரிவித்திருந்தாலும், இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோம் அதில் சார்ஜர் மற்றும் ஹெட்போன் கூடவா வைக்கமாட்டார்கள் எனப் பலரும் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தார்கள்.

Brazil watchdog fines Apple Rs 14.4 crores for not including charger

போகிற போக்கைப் பார்த்தால் இனிமேல் ஐபோன் பாக்ஸில் போன் கூட இருக்காதோ என்ற ரீதியில் மீம்ஸ்கள் கூட பறந்தது. இந்நிலையில் ஐபோன் 12 பாக்ஸில் அந்த போனுக்கான சார்ஜரை வைக்கத் தவறியதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு 14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு முகமை. Procon-SP எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு முகமை தான் ஆப்பிளுக்கு இந்த அபராதத்தைப் போட்டுள்ளது.

“தவறான விளம்பரம், விற்பனையில் நியாயம் என்பதே இல்லாமல் சார்ஜரை வைக்காமல் போனை விற்பனை செய்தது தவறு” எனச் சொல்லி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. “பிரேசிலில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்ட திட்டங்களைப் பின்பற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும்.

ஐபோன் 12இல் சார்ஜர் வைக்காததால் அதன் விலையில் மாற்றம் உள்ளதா? என்ற கேள்விக்கும் ஆப்பிள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை” என அந்த முகமை தெரிவித்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், ஐபோன் உபயோகிக்கும் நெட்டிசன்கள் பலரும் எங்கள் மனதில் நினைத்ததைப் பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு முகமை செய்துள்ளது எனவும், தற்போது தங்கள் மனதிலிருந்த பாரமெல்லாம் இறங்கி விட்டதாகவும் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்