இவர நியாபகம் இருக்கா? ஒரே ஜூம் காலில் உலக ஃபேமஸ் ஆன அதிகாரி.. மன்னிப்பு கேட்டு மீண்டும் பணிக்கு திரும்பவதாக அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமெரிக்கா: அமெரிக்க நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் இந்திய வம்சாவளியான விஷால் கர்க் என்பவர் வீடியோ கால் மூலம் 900 பேரை வேலையை விட்டு நீக்கியது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இவர நியாபகம் இருக்கா? ஒரே ஜூம் காலில் உலக ஃபேமஸ் ஆன அதிகாரி.. மன்னிப்பு கேட்டு மீண்டும் பணிக்கு திரும்பவதாக அறிவிப்பு
Advertising
>
Advertising

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் தான் பெட்டர் டாட் காம். இந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் வீட்டின் உரிமையாளர்களுக்கு கடன், காப்பீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

Better.com CEO fired employees over Zoom returns to work

900 பேரை பணிநீக்கம்:

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் தான் இந்திய வம்சாவளியான விஷால் கர்க். இவர் கடந்த வாரம் நடந்த வீடியோ கான்பிரென்ஸ் மூலம் அதில் பங்கேற்ற 900 பேரை பணிநீக்கம் செய்து உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் விஷால் கர்க் குறித்து விமர்சனம் செய்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அந்நிறுவனத்தை சேர்ந்த 3 உயர் அலுவலர்கள் தாங்களாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஆழ்ந்த வருத்தம்:

அதோடு, விஷால் கர்க் தனது செயலுக்குப் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதோடு ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். அதில்,'நம் நிறுவன ஊழியர்களுக்கு கடந்த சில வாரங்கள் எவ்வளவு கடினமாக இருந்தன என்பது எனக்குப் புரிகிறது. எனது செயல்களால் ஏற்பட்ட மனக்கசப்பு, கவனச்சிதறல் மற்றும் சங்கடத்திற்காக நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.

ஒரு நிறுவனமாக நாம் எங்கே இருக்கிறோம், சிறந்த தலைமைத்துவம் என்ன? நான் எப்படிப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என்பது பற்றி யோசித்து நிறைய நேரம் செலவிட்டேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்கு நம்பிக்கை உள்ளது:

மேலும், அந்நிறுவனம் விஷால் கர்க் தற்போது தற்காலிக விடுப்பில் இருந்ததாகவும் தற்போது பணியில் சேரப் போவதாகவும் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில்,  'தன்னுடைய தலைமை பண்பு, விழுமியங்களை மேம்படுத்தி நிறுவனத்தை சிறப்பாக்காவும் நிர்வாக குழுவினரிடம் இணக்கமாக செயல்படவும் விஷால் கர்க் விடுப்பில் சென்றிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முக்கியமான காலக்கட்டத்தில் தொலைநோக்கு பார்வை, கவனம், தலைமை ஆகியவற்றில் மாற்றம் மேற்கொள்வதாக அவர் உறுதி அளித்தார். அவர் மீதும் அவரது உறுதிமொழி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

BETTER.COM, ZOOM, FIRE, WORK, விஷால் கர்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்