‘பாட்டா நிறுவனத்தின்’... ‘126 ஆண்டுகால வரலாற்றில்’... ‘இந்தியர் ஒருவர்’... ‘முதன்முறையாக நடக்கும் அதிசயம்’...!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான பாட்டாவில் (BATA) முதன்முறையாக, இந்தியர் ஒருவர் சர்வதேச தலைமை பொறுப்புக்கு வருகிறார்.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல பாட்டா நிறுவனம் 1894 முதல் காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. காலணி சந்தையில் உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான பாட்டா நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரியாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பதவிவகித்து வந்த அலெக்சிஸ் நசார்ட் பதவி விலகும் சூழலில், இந்தியாவைச் சேர்ந்த 49 வயதான சந்தீப் கட்டாரியா தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி ஐஐடி பட்டதாரியான இவர், வோடஃபோனின் இந்தியா மற்றும் ஐரோப்பியப் பிரிவிலும், யூனிலீவர், யம் பிராண்ட்ஸின் கே.எஃப்.சி., பிட்சா ஹட், டாக்கோ பெல் உணவகங்கள் ஆகிய நிறுவனங்களிலும் 24 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சந்தீப் கட்டாரியா கடந்த 2017 ஆம் ஆண்டு பாட்டாவின் இந்திய பிரிவுக்குத் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தற்போது அவர் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாட்டா நிறுவனத்தின் 126 ஆண்டுகால பயணத்தில் இந்தியர் ஒருவர் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும். ஏற்கனவே, மைக்ரோசாஃப்ட்டின் சிஇஓவாக, சத்யா நாதெள்ளா, கூகுளின் சுந்தர் பிச்சை, மாஸ்டர் கார்டின் அஜய் பங்கா, ஐபிஎம் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய இந்தியர்கள் பிரபல நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஏரியாவுல 100க்கும் மேல ஷூக்களை காணும்.. கையும் களவுமா பிடிச்சுட்டேன்!”.. இளைஞரின் வைரல் போஸ்ட்... திருடுனது யார் தெரியுமா? உறைந்து போன மக்கள்!
- 'திடீரென கேட்ட அலறல் சத்தம்'...'ஷூ-வுக்குள் இருந்த ஆபத்து'...'சென்னை'யில் உயிருக்கு போராடும் பெண்!
- 'உஷாரா இருங்க'...'பள்ளிக்கு போக ஷூ போட போன மாணவி'...'திடீரென தலை காட்டிய நாகம்'...பகீர் வீடியோ!