அடேங்கப்பா! 15% சம்பள உயர்வால்... 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் 8.5 லட்சம் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்15% சம்பள உயர்வால் ஊழியர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக உலகமே முடங்கி கிடக்கிறது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் வேலையில் இருந்து தூக்காமல் இருந்தாலே போதும் என்ற மனநிலை நீடித்து வருகிறது. பல்வேறு தொழில்களும் குப்புற கிடக்க இயங்கி வரும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லா விடுமுறை, சம்பளத்தில் பிடித்தம் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,900 கோடி கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வால் சுமார் 8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் மற்றும் படி தொகை 15% உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. ஊழியர்களின் திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்குவது பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நிதியாண்டு முதல் தொடங்குகிறது. ஆனால், தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் விரும்பினால் மட்டுமே இதை வழங்கலாமே தவிர கட்டாயமில்லை.
இந்த புதிய ஒப்பந்தத்தின் விளைவாக தேசிய பென்சன் திட்டத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு 14% உயரும். இதற்காக கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக சுமார் 35 கட்ட பேச்சுவார்த்தை கூட்டங்கள் இந்திய வங்கிகள் சங்கத்துடன், வங்கி ஊழியர் சங்கங்கள் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுல இருந்து மீண்டவங்க... 'கட்டாயம்' இதெல்லாம் பண்ணனும்: சுகாதாரத்துறை
- தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதி!.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது!.. முழு விவரம் உள்ளே!
- வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்காக... வீடு வீடாகச் சென்று வேலை தேடும் காவல் அதிகாரி!.. சென்னையில் பரபரப்பு!.. என்ன நடந்தது?
- 50 பேர்... 0.5 மிலி... தமிழகத்தில் இன்று முதல் COVAXIN பரிசோதனை ஆரம்பம்!.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
- 'ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினார்'... 'இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம்'... மாநகராட்சி விளக்கம்!
- 'அவ தான் எங்க மகராசி'...'கொரோனா இருக்குமோன்னு செக் பண்ண போனா'... 'நொறுங்கிப் போன பெற்றோர்'... 'சென்னையில் நடந்த சோகம்!
- “அரை மணி நேரத்துல 7 பேர்!”.. கொரோனாவை எதிர்க்க, சாத்தியமானது தமிழக அரசின் “அடுத்த முயற்சி!”.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!
- Video: அப்டியே 'குடிச்சிருங்க' கண்ணுகளா... கொரோனா 'எட்டிக்கூட' பார்க்காது... வைரலாகும் 'வீடியோ'வால் 'அதிர்ந்து' போன பொதுமக்கள் !
- டீயை குடிச்சிட்டு 'கப்ப' சாப்ட்ருங்க... கொரோனாவுக்கு மத்தியிலும்... மாஸா 'கல்லா' கட்டும் மதுரைக்காரர்!
- “சொன்னா கேக்கவே மாட்டிங்குறாங்க!”.. பொதுமக்களின் இந்த முடிவால் டேஞ்சர் ஸோனில் இருக்கும் ‘நகரங்கள்!’