வொர்க் ஃப்ரம் ஹோமினால் இவ்வளவு நன்மைகளா...! 'அசால்ட்டா ரூ.5000 சேவ் பண்றோம்...' - பிரபல நிறுவனத்தின் ஆய்வு முடிவு...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா ஒர்க் ஃப்ரம் ஹோம் மூலம் தினமும் 2 மணி நேரமும், மாதம் ரூ.5000 வரை சேமிக்க முடிகிறது என awfis என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு, ஒர்க் ஃப்ரம் ஹோம் என புதிய பயன்பாட்டு கொள்கைகள் ஒரு சிலருக்கு கோபம் ஏற்படுத்தினாலும் ஒரு சில மக்கள் அதனை விரும்பவே செய்கின்றனர். மேலும் awfis என்னும் ஸ்பெஸ் ப்ரொவைடர் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், ஒர்க் ஃப்ரம் ஹோம் காலகட்டத்தில் சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2 மணி நேரம் மிச்சப்படுவதோடு, ரூ.5000-ம் செலவும் குறைகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ஆய்வு நடத்திய மொத்த சதவீத பேரில் 80% பேர் தங்கள் வேலைகளை அலுவலகத்திற்கு சென்று செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே செய்ய விரும்புவதாவும், 74% பேர் தங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதால், கஃபேக்கள் அல்லது அவர்களது வீடுகளிலிருந்து தொலைதூரத்தில் வேலை செய்யத் தயாராக உள்ளனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 20% பேர் வீட்டிலிருந்து வேலை செய்து ஒவ்வொரு மாதமும் ரூ .5000-10,000 சேமிக்கிறார்கள் என்ற அறிக்கையும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்திய போன்ற அதிக விலை மற்றும் செலவு உணர்திறன் கொண்ட நாட்டில், வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் உணவு, போக்குவரத்து, கம்பெனி செல்ல புது ஆடைகள் என எந்த ஆடம்பர செலவும் இல்லாமல் சராசரியாக, ஒரு ஊழியர் மாதத்திற்கு ரூ .5,520 சேமிக்கிறார். இது சராசரி இந்தியரின் சம்பளத்தில் சுமார் 17% ஆகும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்த ஆய்வானது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏழு இந்திய மெட்ரோ நகரங்களில் 1,000 பேருடன் நடத்தப்பட்டதாகவும் awfis என்னும் ஸ்பெஸ் ப்ரொவைடர் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் ஒரு சிலர் சாதாரண நாட்களில் தாங்கள் சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ததாகவும், இந்த கொரோனா ஊரடங்கால் அதன் பயண செலவும் நேரமும் மிச்சமாகி இருப்பதாக 60% பதிலளித்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களில் சிலர் தாங்கள் வீட்டில் குறைந்த இணைய வேகம், ஸ்பாட் தொழில்நுட்ப உதவி இல்லாதது போன்ற சவால்களை  எதிர்கொண்டதாகவும், மின்சார பில் உயரும் என்று சிலர் புகார் கூறினர்.

மேலும் அவற்றில் கிட்டத்தட்ட 47% பேர் மேசை மற்றும் நாற்காலி இல்லாதது குறித்து புகார் அளித்தனர், 71% பேர் வீட்டில் ஒரு பிரத்யேக வேலை செய்யும் பகுதியின் தேவையை வெளிப்படுத்தினர்.

இந்த ஆய்வு சராசரி ஊழியரின் மனக்கவலைகளையும், அவர்கள் இந்த கொரோனா ஊரடங்கால் சேமிக்கக்கூடிய விஷயங்களையும் முன்வைத்துள்ளது எனலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்