"இனி 'ஆஃபிஸ்' பக்கம் வர வேணாம்"... வீட்ல இருந்தே 'வேலை'ய பாருங்க... அறிவித்த 'முன்னணி' சாப்ட்வேர் 'நிறுவனம்'!!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

மேலும், ஊரடங்கு கட்டுபாடுகள் காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான அட்லாசியன் நிறுவனம் தற்போதுள்ள சூழ்நிலை மாறினாலும் தங்களது ஊழியர்கள் திரும்ப அலுவலகம் வரத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, அந்த நிறுவனம் சார்பில் ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை பார்க்கலாம். மாறாக வீட்டிலேயே இருந்து பணிபுரியலாம் என அறிவித்திருந்தது.

கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு, அனைத்து தொழில்களிலும் உயர்வு உண்டாகும் என நம்புகிறோம். அதனைக் கொண்டு எங்களையும் எங்களது வாடிக்கையாளர்களையும் சிறந்த முறையில் வழிநடத்த விரும்புகிறோம்' என நிறுவனத்தின் CEO மற்றும் நிறுவனர் ஸ்காட் பர்குஹார் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல இடங்களில் இவர்களது அலுவலகங்கள் உள்ள நிலையில், அங்கு புதிதாக ஆள் சேர்ப்பு நடத்தி விரிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும்.

'எங்களது பயிற்சி மற்றும் கற்றல் மூலம் எங்களது தயாரிப்புகளை எங்கிருந்து வேண்டுமானாலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முறையில் கொடுக்க உதவி செய்யும்.தொடர்ந்து, வருங்காலத்திலும் வாடிக்கையாளர்கள் எங்களுடன் பயணிக்க வழி வகுக்கும்' என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்