'அசத்தலாக அறிமுகமான iPhone 13'... 'அசரவைக்கும் கேமரா மற்றும் சிறப்பம்சங்கள்'... விலையை கேட்டா மட்டும் கொஞ்சம் நெஞ்சு வலிக்கும்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபேட் ஆகியவற்றை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 13 போன்களில் சூப்பர் ரெடினா எச்டிஆர் டிஸ்ப்ளே செராமிக் ஷீல்ட் பாதுகாப்புடன் வருகிறது. மேலும், இளஞ்சிவப்பு, நீலம், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் ஐபோன் களமிறக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்டிருப்பதால் உலகிலேயே வேகமாக போன் ஆப்பிள் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பிராசஸரில் 16 கோர் நியூரல் என்ஜின் உள்ளது. புதிய பிராசஸருடன் ஐபோன் 13 மாடலில் 12 எம்பி வைடு கமெரா சென்சார் உள்ளது. ஐபோன் 13 மாடலில் உள்ள சினிமேடிக் வீடியோ அம்சம் சினிமா தர வீடியோக்களை படமாக்க வழி செய்கிறது. ஆப்பிள் நிகழ்வில் இந்த மோட் கொண்டு படமாக்கப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது.

2021 ஐபோன் மாடலில் 5ஜி தொழில்நுட்பம் முன்பைவிட அதிகமாக சப்போர்ட் செய்கிறது. இதற்கென புது ஐபோனில் பிரத்தியேக உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள பேட்டரி முந்தைய மாடலை விட 2.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. ஐபோன் 13 மினி பேட்டரி முந்தைய ஐபோன் 12 மினி மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது.

ஐபோன் 13 மினி 128 ஜிபி விலை 699 டாலர்கள் என்றும் ஐபோன் 13 விலை 799 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய மதிப்பில் அதிகபட்சமாக ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் விலை ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்