"என்னோட தப்புதான்.. நான் அப்படி செஞ்சிருக்க கூடாது".. ஊழியர்களை பணிநீக்கம் செய்த CEO.. கண்ணீருடன் போட்ட செல்பி..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தனது நிறுவன ஊழியர்களில் சிலரை பணிநீக்கம் செய்துவிட்டதாக அழுத முகத்துடன் செல்பியை பகிர்ந்திருக்கிறார் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. அவருடைய பதிவு தற்போது சமூக வலை தளங்களில் அதிமானோரால் பகிரப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

ஹைப்பர் சோசியல் (HyperSocial) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பிராடன் வாலேக். இவர் தனது நிறுவனத்தின் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டதாக பதிவு ஒன்றை தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கான காரணத்தையும் அவர் அந்த பதிவில் பட்டியலிட்டிருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் அழுதபடி செல்பி ஒன்றையும் அந்த பதிவுடன் பகிர்ந்திருக்கிறார் வாலேக். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

என்னுடைய தவறு தான்

வாலேக் தன்னுடைய பதிவில்,"நான் பதிவிட்டதிலேயே மிகவும் பாதிப்பை ஏற்படுத்திக்கூடிய பதிவாக இது இருக்கும். இதை பதிவிடலாமா, வேண்டாமா என பலமுறை யோசித்துவிட்டேன். எங்கள் ஊழியர்களில் சிலரை பணிநீக்கம் செய்ய வேண்டியிருந்தது. கடந்த சில மாதங்களில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து பதிவிடுவதை கவனித்திருக்கிறேன். அவற்றில் பெரும்பாலானவை பொருளாதாரம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்பட்டதாக இருந்திருக்கின்றன. ஆனால், இது என்னுடைய தவறு. கடந்த பிப்ரவரி மாதம் எடுத்த முடிவிலேயே வெகுகாலம் நிலையாக இருந்துவிட்டேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வேலை

தங்களது நிறுவனத்தின் முதன்மை இலக்கை நோக்கி நகராமல், வேறு ஒரு இலக்கை நோக்கி குழுவை செலுத்தியதாகவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியதாகவும் வாலேக் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னுடைய ஒவ்வொரு பணியாளர்களை பற்றியும் தனக்கு தெரியும் என்றும் அவர்களுடைய மகிழ்ச்சியான மற்றும் கவலை நிறைந்த பக்கங்களை தான் அறிந்திருந்ததாகவும் வாலேக் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒவ்வொரு ஊழியரையும் நியமனம் செய்யும்போது அவர்களுடைய மனங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதைவிட சிறுமையான தருணத்தை தன்னால் நினைத்துப் பார்க்க முடியாது எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், அழுதபடி அவர் செல்பி ஒன்றியும் பகிர்ந்திருக்கிறார். இது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

CEO, FIRED, EMPLOYEES, ஊழியர்கள், பணிநீக்கம், சிஇஓ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்