ஹைய்யா... எங்களுக்கு போனஸ், இன்க்ரிமென்ட் போடுறாங்க...! 'இது என்ன பிரமாதம்... ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு...' 'அள்ளி வழங்கிய நிறுவனம்...' - கொண்டாட்டத்தில் ஊழியர்கள்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமெரிக்காவில் ஈ-காமர்ஸ் துறையில் சிறந்து விளங்கும் அமேசான் (Amazon) தற்போது உலகளவில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈ-காமர்ஸ் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனம் அமேசான். கொரோனா காலக்கட்டத்தில் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்த நிலையில், அமேசானில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகாமல் இருந்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கூடுதலாக சுமார் 1,25,000 கிடங்கு மற்றும் போக்குவரத்து ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் பணிபுரியும் அமேசான் ஊழியர்களின் சராசரி ஊதியத்தை ஒரு மணி நேரத்துக்கு 18 டாலருக்கு மேல் உயர்த்தவும் அமேசான் முடிவு செய்துள்ளது.

அதோடு, அமேசானில் இணையும் டெலிவரி ஊழியர்களுக்கு 3000 டாலர் போனஸ் வழங்கி வருவதாக அமேசான் டெலிவரி சர்வீசஸ் துணைத் தலைவர் டேவ் போஸ்மன் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு எல்லாம் இந்தியாவிலும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்