ஏசி 'விலைய' பார்த்து 'இன்ப' அதிர்ச்சியான வாடிக்கையாளர்கள்... 'காலியாகிட போகுது, சீக்கிரம் புக் பண்ணிடுவோம்...' - கொஞ்ச நேரத்துலையே 'அமேசானில்' நடந்த அதிரடி டிவிஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஒரு ஏ.சி ரூ.5,900-க்கு விற்பனை என அமேசான் நிறுவனம் அறிவித்த நிலையில் ஆர்டரில் அமேசான் ஆப் ஹாங் ஆன சம்பவம் நடந்துள்ளது.

ஆடைகள் முதல் எலக்ட்ரானிக் ஐட்டம் வரை அனைத்துப் பொருட்களும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்நிலையில் டோஷிபா 2021 மாடல் ஏசியின் மதிப்பான ரூ.96,000-க்கு பதில் ரூ.5,900-க்கு விற்பனை என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

ஆனால் விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது, ரூ.5,900 தள்ளுபடி என பதிவிடாமல், ரூ.5,900க்கு விற்பனை என தவறாக பதிவிட்டு அமேசானில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி பார்த்தால் ரூ.96,000 ஏசி 94% தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களோ டோஷிபா ஏசி 94% தள்ளுபடியா என வியந்து பலரும் முன்பதிவு செய்தனர்.

என்னடா இது...! இவ்வளவு ஆர்டரா என அமேசான் உஷாரான பிறகு தான், தனது தவறை ஒப்புக்கொண்டு, ஏசியின் விலையை திருத்தி மீண்டும் ரூ.90,800-க்கு விற்பனை என அறிவித்தது.

ரூ.5,900-க்கு ஏசியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பலரும் அமேசான் செய்த விலை மாற்றத்தால் அதிர்ச்சியும், வருத்ததிற்க்கும் உள்ளாகினர். ஆனால் இது குறித்து அமேசான் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்