‘9.5 ஏக்கர், 15 ஆயிரம் ஊழியர்கள், ஹெலிபேட் வசதி’.. இந்தியாவில் பிரமாண்ட கிளையை திறந்த அமேசான்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது பிரமாண்டமான கிளை நிறுவனத்தை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

ஹைதராபாத்தில் சுமார் 9.5 ஏக்கர் பரப்பளவில் அமேசான் தனது கிளை நிறுவனத்தை சமீபத்தில் திறந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த வளாகத்தை தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி, அமேசான் துணைத் தலைவர் ஜான் ஸ்காட்லெர் மற்றும் அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் அமித் அகர்வால் ஆகியோர் இணைந்து துவங்கி வைத்துள்ளனர்.

இந்தியாவில் மட்டும் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 62 ஆயிரம் என கூறப்படுகிறது. இதில் ஹைதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் மட்டும் 15 ஆயிரம் பேர் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வளாகத்தில் தாய்மாருக்கான பிரத்யேக அறை, ஓய்வு மற்றும் குளியலைறைகள், பிராத்தனை கூடங்கள், ஹெலிபேட், கஃபேடேரியா, ஜிம் என அனைத்து வசதிகளும் உள்ளது. சுமார் 4 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள அமேசான் வளாகம், உலகின் மிகப்பெரிய வளாகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் அடுத்த ஆண்டில் சுமார் 5 லட்சம் சதுர அடியில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

AMAZON, HYDERABAD, LARGESTCAMPUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்