‘என்னோட 5 வயசு கனவு’!.. அடுத்த மாசம் நிறைவேறப்போகும் ஆசை.. அமேசான் நிறுவனர் அசத்தல் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி கோடீஸ்வரரும், அமேசான் நிறுவன தலைவருமான ஜெஃப் பெஸோஸ், ப்ளூ ஆர்ஜின் (Blue Origin) என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஜெஃப் பெஸோஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 20-ம் தேதி அவர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blue Origin நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த முதல் பயணத்திலேயே ஜெஃப் பெஸோஸ் பயணிக்க உள்ளார். ஜெஃப் பெஸோஸுடன் அவரது சகோதரர் மார்க் பெஸோஸ் மற்றும் விண்வெளிக்கு பயணிப்பதற்காக ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரும் பயணிக்க உள்ளனர். 3 பேர் பயணிக்க உள்ள இந்த விண்வெளி பயணித்தில், ஜெஃப் பெஸோஸ் மற்றும் அவரது சகோதரர் பயணிக்க உள்ள நிலையில், 3-வது இருக்கை ஏலம் விடப்பட்டது. 136 நாடுகளை சேர்ந்த 5,200-க்கும் அதிகமானோர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். அதில் 2.8 மில்லியன் டாலருக்கு ஒருவர் ஏலம் எடுத்தார்.

இதற்கு முன்னதாக பலமுறை இந்த Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் ஜெஃப் பெஸோஸ் பயணித்து பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.  இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெஃப் பெஸோஸ், ‘ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. அது மிகவும் சாகசம் நிறைந்த ஒன்றாக இருக்கும்’ என அவர் பதிவிட்டுள்ளார். வரும் காலத்தில் தனியார் நிறுவனங்களின் ராக்கெட் மூலம் சாமானிய மக்களும் விண்வெளிக்கு பயணம் செய்ய வாய்ப்பு பிரகாசமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்