'கட்டணங்களை உயர்த்தி'... ‘புதிய ப்ரீபெய்டு பிளான்களை’... ‘அறிவித்த பிரபல நிறுவனங்கள்'... 'இன்று நள்ளிரவு முதல் அமல்’!
முகப்பு > செய்திகள் > வணிகம்நிதி நெருக்கடியில் உள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில், சேவை கட்டணத்தை 42 சதவிகிதம் வரை வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதையடுத்து புதிய ப்ரீபெய்டு பிளான் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி ஏர்டெல்:
84 நாட்களுக்கு தினம், 1.5 ஜி.பி. டேட்டாவுடன், நேர வரம்பின்றி பேசும் திட்டத்திற்கான கட்டணம், 31 சதவிகிதம் உயர்ந்து, 448 ரூபாயிலிருந்து, 598 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுபோல் 199 ரூபாய் பிளான், 248 ரூபாயாக உள்ளது. 249 ரூபாய்க்கு கிடைத்த பிளான் சலுகைகள், இனி ரூ.298 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஓராண்டு பிளான் 1,699 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 2,398 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வோடபோன்:
வோடபோனில் ஓராண்டுக்கான 1,699 என இருந்த கட்டணம் 41.2 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 2,399 ரூபாயாகியுள்ளது. 84 நாட்களுக்கான 458 பிளான், தற்போது 599 என உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 199 பிளான், இனி 249 என இருக்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ:
40 சதவிகித கட்டணம் உயர்த்தப்பட்டாலும், அதைவிட 300 மடங்கு சலுகையை அறிவித்துள்ளது ஜியோ. இந்த நிறுவனத்தின் கட்டண உயர்வு, டிசம்பர் 6-ல் அமலுக்கு வருகிறது. அதன்படி நியூ ஆல் இன் ஒன் திட்டத்தின் கீழ், ஒரு மாதத்துக்கு 222, இரண்டு மாதத்துக்கு 333, மூன்று மாதத்துக்கு 444 ரூபாயில் பிளான்களை ஜியோ கொண்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கஸ்டமர் தான் முக்கியம்’... 'ஆல் இன் ஒன் திட்டத்தில் அதிரடி சலுகை வழங்கும் ஜியோ'!
- ‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..
- ‘அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்’.. ‘ரொம்ப மலிவான விலையில்’.. அசர வைத்த ஜியோவின் புது அறிவிப்பு..!
- 'ஐயுசி' கட்டணம்.. இன்னும் '2 ஆண்டுகளுக்கு' தொடரும்.. வாடிக்கையாளர்கள் 'கடும்' அதிர்ச்சி!
- ‘கட்டண உயர்வின்றி தொடர’.. ‘பிரபல’ நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ‘அசத்தல் ஐடியா’..
- 'வாய்ஸ்' காலுக்கு 67%.. 'டேட்டா'வுக்கு 20% 'கட்டண' உயர்வு.. இனி 'பாத்து' தான் செலவு பண்ணனும்!
- இந்தியாவுல 4ஜி 'மட்டும்' தான் இருக்கணும்.. மக்களே 'முடிவு' பண்ணட்டும்.. செம சண்டை!
- ஏர்டெல், ஜியோ, வோடபோனுக்கு '2 வருடங்கள்' அவகாசம்.. கட்டண 'உயர்வு' முடிவுக்கு வருமா?
- வெறும் '7 ரூபாய்க்கு' 1 ஜிபி டேட்டா.. 'பிரபல' நெட்வொர்க்கின் அதிரடி ஆபர்!
- கட்டண 'உயர்வு' போட்டியில்.. 'ஜியோ'வும் இறங்கலாம்.. 30-40% உயர்த்த திட்டம்!