"நான் உங்கள நம்புறேன்.. இனி யாரும் ஆபிஸ் வரவேண்டாம்".. பிரபல நிறுவனத்தின் CEO அனுப்பிய மெயில்.. திக்குமுக்காடிப்போன ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் இனி வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் அறிவித்திருப்பது அந்நிறுவன ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

Airbnb

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Airbnb நிறுவனம் சுற்றுலா, ஹோட்டல் புக்கிங் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட இந்த நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் விருப்பப்படும் பட்சத்தில் அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் எனவும், அவர்களுக்கான ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது அந்நிறுவன ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

கொரோனா

2020 ஆம் ஆண்டு உலகமே கொரோனா பெருந்தொற்றால் ஸ்தம்பித்தது. கணப்பொழுதில் பரவி வந்த இந்த கொடிய வைரஸ் தொற்றால் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும்படி பல நிறுவனங்கள் அறிவித்தன. தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்ததற்கு பின்னர் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறைந்து இருக்கின்றன. இதனால் சில நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வரும்படி பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால் Airbnb நிறுவனம் தங்களது ஊழியர்கள் விருப்பப்படும் இடங்களிலிருந்து தொடர்ந்து பணி புரியலாம் என அறிவித்திருக்கிறது.

என்ன காரணம்?

இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் செஸ்கி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில்,"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் தலைகீழாக மாறியது. நம்முடைய அலுவலகங்கள் மூடப்பட்டன. நாம் அனைவரும் வீட்டில் இருந்தே வேலைசெய்து வந்தோம். இத்தனைக்கும் மத்தியில் இந்த இரண்டு ஆண்டுகளில் நாம் அபாரமாக பணிபுரிந்திருக்கிறோம். உலகம் இப்போது மெல்ல இயல்புநிலைக்கு மீண்டு வருகிறது. ஆகவே, உங்கள் விருப்பப்படி எங்குவேண்டுமானாலும் தங்கி பணிபுரியுங்கள். பணியாளர்களை பார்க்காமல் எப்படி இது சாத்தியம் என சிலர் கேட்கிறார்கள். நான் எப்போதும் ஒன்றைத்தான் சொல்வேன். நான் உங்களை நம்புகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டிற்கு முன்பு அதாவது, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இருந்ததை விட அந்த நிறுவனத்தின் வளர்ச்சி 2021 ஆம் ஆண்டு 25 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆகவே, தனது ஊழியர்கள் விருப்பப்படும் இடத்தில் இருந்து பணிபுரிய அந்த நிறுவனம் அனுமதித்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

AIRBNB, STAFFERS, WORK, WORK REMOTELY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்