மத்திய அரசு வேலை.. ரூ.1,50,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிக்க ரெடியா..?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் (AIAHL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜர் மற்றும் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 07.12.2021-ம் தேதிக்குள் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertising
>
Advertising

வேலை தரும் நிறுவனம்: ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட்
வேலை வகை: அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 10

சொத்துக்களின் தலைமை & பணமாக்குதல் அதிகாரி-CPO - 01 (Chief of Properties &Monetization Officer-CPO - 01)
பணியாளர் மற்றும் நிர்வாகத் தலைவர் -CPA - 01 (Chief of Personnel & Administration -CPA - 01)
துணை தலைமை நிதி அதிகாரி-DCF - 01 (Deputy Chief Finance Officer-DCF - 01)
மேலாளர் - பணியாளர் & நிர்வாகம் -MPA - 01 (Manager - Personnel & Administration -MPA - 01)
மேலாளர்- சொத்துக்கள்  மற்றும் பணமாக்குதல் -MPM - 01 (Manager- Properties &Monetization -MPM - 01)
மேலாளர் சட்டம் & கார்ப்பரேட் -MLC - 01  (Manager Legal & Corporate -MLC - 01)
மேலாளர்-நிதி & கணக்குகள்-MFA - 01  (Manager-Finance & Accounts-MFA - 01)
அதிகாரி பணியாளர், & நிர்வாகம் -OPA - 01 (Officer Personnel, & Administration -OPA - 01)
அதிகாரி- சொத்துக்கள் மற்றும் குடிமைப் பணிகள்-OPC - 01 (OFFICER- Properties & Civil Works-OPC - 01)
அதிகாரி-நிதி & கணக்குகள்-OFA - 01 (Officer-Finance & Accounts-OFA  - 01)

கல்வி தகுதி: மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு தகுந்த பாடப்பிரிவுகளில் பி.இ, பி.டெக், சிஏ, பட்டதாரிகள், சட்டத்துறையில் முதிநிலைப்பட்டம், எம்பிஏ, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  சம்மந்தப்பட்ட பணியில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருப்பதும் விண்ணப்பிக்க முக்கியமான தகுதியாகும்

தகுதி உடைய  45-60க்குள் இருப்பவர்கள் http://www.aiahl.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

ஊதியம்: மாதம் ரூ.60,000 - ரூ.1,50,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Pre-Employment Medical Examination மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடத்திற்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது விண்ணப்பம் தயார் செய்தோ, தெளிவாக பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்று சேர கடைசி தேதி: 07.12.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.aiahl.in/doc/1.Advertisement-Ch.ofPropertiesMonetization-AIAHL-15Nov21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்