‘முதல்ல Twitter.. அடுத்து இந்த கம்பெனியா..!’.. உலகின் மிக ‘பிரபல’ நிறுவனத்தின் மீது கண் வைத்த எலான் மஸ்க்.. எதிர்பார்ப்பை எகிர வைத்த ‘ஒற்றை’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

டுவிட்டரை தொடர்ந்து மற்றொரு பிரபல நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கப் போவதாக ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், கடந்த மாதம் டுவிட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். அதனால் டுவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழு உறுப்பினராக இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக போர்டு உறுப்பினர் குழுவின் இணைய மறுத்த எலான் மஸ்க், சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரை விலைக்கு வாங்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் போட்டிப் போட்டுகொண்டு வந்தன. ஆனால், இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிவிட்டார். டுவிட்டரில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனச் சொல்லி வந்த எலான் மஸ்க், தற்போது டுவிட்டரில் பல புது மாற்றங்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், ‘அடுத்து நான் கோகோ கோலாவை வாங்க போகிறேன். கோகோயினை மீண்டும் கோகோ கோலாவில் சேர்க்க இருக்கிறேன்’ என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இதனால் டுவிட்டரை தொடர்ந்து கோகோ கோலா நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் டுவிட்டர் குறித்தும் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘டுவிட்டரில் என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன் இருக்க வேண்டும். அதனால் உங்கள் செய்திகளை யாரும் உளவு பார்க்கவோ அல்லது ஹேக் செய்யவோ முடியாது. பொதுநம்பிக்கை ஏற்படும் வகையில் அரசியல் ரீதியாக டுவிட்டர் நடுநிலையுடன் இருக்க வேண்டும். நடுநிலை என்றால் தீவிர வலதுசாரியோ, தீவிர இடதுசாரியோ கோபப்படுவார்கள்’ எனக் குறிப்பிடுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

TWITTER, ELONMUSK, COCA-COLA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்