உலக பணக்காரர்கள் பட்டியல்.. திடீர் பின்னடைவை சந்தித்த தொழிலதிபர் அதானி.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலக பணக்காரர்களின் பட்டியலில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி நான்காம் இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

கவுதம் அதானி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் கவுதம் அதானி. இவருடைய பெற்றோர் சாந்திலால் அதானி - சாந்தி ஆவர். உள்ளூரிலேயே பள்ளிக் கல்வியை முடித்த கவுதம் அதானி, குஜராத் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் சேர்ந்தார். ஆனால், இரண்டாம் ஆண்டே கல்லூரியை விட்டுவிட்டு பணிக்குச் சென்றுவிட்டார். துணி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையை அருகிலிருந்து பார்த்து வளர்ந்த அதானி 1988 ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் எனும் ஏற்றுமதி நிறுவனத்தை துவங்கினார். இதுவே, இன்று உலகளவில் பிரபலமான அதானி குழுமமாக வளர்ந்து நிற்கிறது.

போர்ப்ஸ் இதழின்படி கடந்த வாரத்தில் அதானி உலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். நேற்றைய நிலவரப்படி அதானியின் சொத்துமதிப்பு சுமார் 796 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு சரிந்தது. இதன் காரணமாக இவருடைய சொத்துமதிப்பு தற்போது 134 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

ஜெஃப் பெஸோஸ்

இதனிடையே அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ்-ன் சொத்துமதிப்பு கடந்த சில நாட்களில் உயர்வை கண்டிருக்கிறது. தற்போது அவருடைய சொத்துமதிப்பு 138.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி உலக பணக்காரர்களின் பட்டியலில் 4 ஆம் இடத்திற்கு பெஸோஸ் தள்ளப்பட்ட நிலையில், தற்போது  மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் இடத்தில் 141.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துமதிப்புடன் பெர்னார்ட் அர்னால்ட் இருக்கிறார்.

எலான் மஸ்க்

விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வரும் எலான் மஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது. இவருடைய சொத்துமதிப்பு 249.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

WORLD RICH, LIST, ADANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்