"இப்போதைக்கு '25,000' பேர தூக்குறோம்",,.. அடுத்த 'லிஸ்ட்'டும் ரெடியாக போகுதாம்,,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால் கலங்கி போன 'ஊழியர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா பேரிடர் காரணத்தினால், உலகின் பல முன்னனி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான ஆக்ஸென்சர் ஐடி நிறுவனம் தங்களின் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலிய ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள நிலையில், உலகளவில் 5 சதவீத ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
நோய் தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியின் காரணமாக ஆக்ஸென்சர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. உலகளவில் 5 லட்சம் ஊழியர்கள் ஆக்ஸென்சர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அதில் 5 சதவீதம் பேர் என்றால் 25 ஆயிரம் ஆகும். இதனால் 25 ஆயிரம் ஊழியர்கள் கலங்கிப் போயுள்ளனர். வேலையிழப்பின் ஆரம்ப அலையில், கடைநிலையில் உள்ள 5 சதவீத ஊழியர்களை இலக்காக வைத்து கடந்த 14 ஆம் தேதிக்கு முன் இந்த முடிவை ஆக்ஸென்சர் நிறுவனம் எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெஞ்சில் இருக்கும் ஊழியர்களும் புதிய செயல்திறன் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களையும் விரைவில் பணியை விட்டு தூக்குவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேலையிழப்பின் இரண்டாவது அலையின் போது அடுத்த 5 சதவீத ஊழியர்களையும் வேலைநீக்கம் செய்யவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், ஊழியர்களிடையே அது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'கொரோனா'வால 'அடி' மேல 'அடி' வாங்கிட்டோம்"... "எல்லாருக்கும் மெயில் போட்டாச்சு"... முன்னணி நிறுவனத்தின் 'முடிவால்'... நொந்து போன 'ஊழியர்கள்'!!!
- "'கொரோனா'வால பெரிய அடி வாங்கிட்டோம்"... '7000' பேரை வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனம்'... கலங்கி நிற்கும் 'ஊழியர்கள்'!!
- "கொரோனா ரவுண்டு கட்டி அடிக்குது பாஸ்"... "என்ன பண்ணப்போறோம்னே தெரியல".. 'நிதி' இழப்பால் 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனங்கள்'!!!
- இந்த 'கொரோனா'வால பெருத்த 'நஷ்டம்'பா... "நீங்களே கெளம்புனா நல்லா இருக்கும்"... ஊழியர்களுக்கு செக் வைத்த முன்னணி 'வங்கி'!!!
- "நெலம ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு"... '35,000' ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்... முன்னணி 'நிறுவனம்'!!!
- "நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க இத பண்ணியாக வேண்டியது இருக்கு!".. LayOff அறிவிச்ச அடுத்த நாள் பிரபல நிறுவனத்தின் CMO போட்ட பதிவு!
- "கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு!".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க! வேறலெவல்!