5 வருஷம் 'வேலையே' பார்க்காம ப்ரோமோஷன், இன்கிரிமெண்ட்-லாம் வாங்கினேன்...! 'என் மனைவிக்கு கூட இது தெரியாது...' - பரம 'ரகசியத்தை' உடைத்த நபர்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

2015ஆம் ஆண்டு டேட்டா என்ட்ரி வேலையில் ஒருவர் பணிக்குச் சேர்ந்துள்ளார். அவருக்கு இரவு நேரப்பணி வழங்கப்பட்டது.

Advertising
>
Advertising

வேலைக்கான பயிற்சி பெற்ற பிறகு, அவருக்கு அவர் செய்ய வேண்டிய வேலையை ஒரு புரோகிராம் 'கோட்' மூலமாக செய்ய முடியும் என்பதை உணர்ந்துள்ளார்.

ஆகவே, அந்த புரோகிராம் கோடை உருவாக்க ஒரு மென்பொருள் உருவாக்குபவரை நியமித்து தன்னுடைய இரண்டு மாத சம்பளத்தை வழங்கினார். அதன்பின்பு, அவர் அலுவலக நேரத்தில் வேலையை செய்வதைத் தவிர்த்து, தான் விரும்பியதை எல்லாம் செய்து வந்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு ஆர்டர் போடவேண்டும் என ஆர்டரின் விவரங்களை முன்கூட்டியே இன்புட் கொடுத்துவிட்டால் அதற்கேற்றபடி அந்த கம்ப்யூட்டர் புரோகிராம் அவருடைய வேலையை செய்துவிடும். இதையே தான் 5 வருடங்களாக செய்து வருகிறாராம்.

அந்த கம்பனியில் வேலை செய்யும் எல்லோரையும் விட இவர் அதிக ஆர்டர்களை அடிப்பதால் இவர் நிறுவனம் கண்காணிக்கவே இல்லையா என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். இவர் பணிபுரிந்த 5 வருடமும் வீட்டிலேயே இருந்துள்ளார் என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயம். ஏனென்றால் இவரின் நிறுவனம் இவருக்கு போக்குவரத்து செலவுக்கும், நைட் ஷிப்ட்டுக்கான அலவன்சும் வழங்கவே இல்லையாம்.

முதல் இரண்டு ஆண்டுகள் இவர் செய்த வேலையைப் பாராட்டி பல முறை இவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைத்துள்ளதாம். அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் இதை விட நல்ல வேலைகள் கிடைத்தும் வேறு வேலைக்கு செல்லவே இல்லையாம்.

ஒரு சில சமயங்களில் இவரின் சக ஊழியர்கள் இவருடன் போட்டி போட்டுக் கொண்டு கூடுதலாக ஆர்டர்கள் என்ட்ரியை முயற்சிப்பார்கள். அந்த நேரத்தில் இவரும் தன்னுடைய எண்ணிக்கையை அதிகரித்து விடுவாராம். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு முறை கூட விடுமுறை எடுக்காத காரணத்திற்காகவே இவருக்கு இரண்டு முறை சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ட்விஸ்ட் என்னவென்றால் இவர் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் தன்னுடைய வேலைக்காக ஒரு ப்ரோக்ராம் கோடை செய்து அதன் வழியாக பணியாற்றி வந்ததைப் போலவே, இவர் நிறுவனம் ஒரு புரோகிராமை வடிவமைத்து, இவரை இந்தப் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

ஆனால் இதுவரை இந்த விஷயம் அந்த நிறுவனத்திற்கு தெரியாது. இவரை வேலையை விட்டு அனுப்பியதற்கு கைமாறாக ஒரு தொகையை நிறுவனம் அளித்தது மட்டுமின்றி, அலுவலக எக்யூப்மென்ட் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை இவரே வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு, நிறுவனத்தின் வேறு ஏதேனும் ஒரு பணியில் இவர் வேலைக்கு அப்ளை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

'என்னுடைய இந்த பரம ரகசியத்தை இப்போது தான் உங்களிடம் பகிர்கிறேன். இது என் என் குடும்பம் மற்றும் என் மனைவிக்குக் கூட இதுவரை தெரியாது' என Reddit இல் பகிர்ந்துள்ளார்.

PROMOTION, INCREMENT, 5 YEARS, வேலை, ப்ரோமோஷன், டேட்டா என்ட்ரி, 5 வருஷம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்