ஒரே வீடியோ காலில் 900 பேரை வேலையைவிட்டு தூக்கிய CEO வின் அடுத்த பிளான்.. அடுத்தடுத்து குவிந்த ஊழியர்களின் ராஜினாமா கடிதங்கள்..என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல நிதி நிறுவனமான better.com -ன் 920 ஊழியர்கள் தங்களது பணியினை ராஜினாமா செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் கார்க் அறிவித்துள்ளார்.
Also Read | அது ஏன் கூகுள் மேப்ல இப்படி தெரியுது.? மர்ம வீடா..? நெட்டிசன்களை அலறவைத்த வரலாறு..!
பெட்டர்.காம்
அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இந்தியாவை சேர்ந்த விஷால் கார்க். இவர் கடந்த டிசம்பர் மாதம் ஒரே வீடியோ கால் மூலமாக தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், 35 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 4000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஊழியர்கள் தாமாகவே நிறுவனத்திலிருந்து வெளியேறும்படியும், அப்படி செய்பவர்களுக்கு உரிய தொகை, இன்சூரன்ஸ் ஆகிய வசதிகள் செய்து தரப்படும் எனவும் விஷால் அறிவித்திருந்தார்.
குவிந்த ராஜினாமா கடிதங்கள்
இந்நிலையில், பெட்டர்.காமில் பணிபுரிந்துவரும் இந்திய ஊழியர்களில் 920 பேர் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவை நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தற்போது அறிவித்திருக்கிறார் விஷால்.
இதுகுறித்து முன்னர் பேசியிருந்த விஷால் கார்க்,"அதிகமான பணியாளர்களை வேலைக்கு சேர்த்ததை ஒப்புக்கொள்கிறோம். தவறான நபர்களை பணியில் அமர்த்திவிட்டோம். நான் தோற்றுவிட்டேன். கடந்த 18 மாதங்களாக நான் சரியான செயல்படவில்லை. இதனால் 200 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், தொழிலாளர்கள் முதல்முறை தோல்வியைடைந்தால் ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் மீண்டும் தோல்வியடைய அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார் கார்க்.
உத்திரவாதம்
தாமாக பணியில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு அளிப்பதாக சொல்லப்பட்ட தொகைக்கு முழுமையாக உத்தரவாதம் அளிப்பதாகவும் விஷால் கார்க் உறுதியளித்துள்ளார்.
மொத்தமாக 4000 பேரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக பெட்டர்.காம் நிறுவனம் அறிவித்திருந்த வேளையில், இந்தியாவைச் சேர்ந்த அந்நிறுவனத்தின் ஊழியர்களில் 920 பேர் ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீட்டுக்குள்ள சிவப்பு கலர்ல கறை.. சிசிடிவி கேமராவையும் காணோம்.. ஆடிட்டர் தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. சென்னையையே அதிர வைத்த பகீர் சம்பவம்..!
- வருஷத்துல எத்தன நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கங்க..வாயை பிளந்த ஊழியர்கள்.. அருமையான கம்பெனியா இருக்கும்போலயே..!
- “என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கோங்க”.. மேட்ரிமோனியில் வலை விரித்த ‘சென்னை’ வாலிபர்.. கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!
- ‘தோட்டத்தில் தங்கியிருந்த 3 பேர் யார்?’.. புதுக்கோட்டை தொழிலதிபர் மரண வழக்கில் அதிரடி திருப்பம்..!
- ஏற்கனவே ஒரே வீடியோ கால்-ல 900 பேர வேலையை விட்டு தூக்குன CEO.. இப்போ இப்படி ஒரு ஆர்டரா..அதிர்ந்துபோன ஊழியர்கள்..!
- கொடுத்த பணத்துக்கு கணக்கு காட்டாததால் கோபம்.. மகனை பழிவாங்க அப்பா செஞ்ச திடுக்கிடும் காரியம்..!
- "இதுதான் நீங்க வேலை பாக்குற லாஸ்ட் நாள்"...800 ஊழியர்களை ஒரே வீடியோ காலில் வேலையை விட்டு தூக்கிய கம்பெனி..!
- ஆப்பிள் Office-ல வெள்ளை நிற பவுடர் பாக்கெட்.. ஊழியர்களை உடனே வெளியேறச் சொன்ன மீட்புப்படை.. என்ன ஆச்சு..?
- பாசமாக பழகுவதுபோல் நடித்த பெண்.. நம்பிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி! திருச்சி அருகே பரபரப்பு..!
- விடுதி அறையில் காதலனுடன் இருந்த இளம்பெண்.. நள்ளிரவில் ஹோட்டலுக்கு வந்த போன் கால்.. பதறியடித்த ஊழியர்கள்