‘பிரபல ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்’... ‘கொரோனா பாதிப்பால்’... 25% கூடுதல் சம்பளம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா வைரஸால் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் வேளையில், தனது இந்திய ஊழியர்களை ஊக்குவிக்க கூடுதலாக 25 சதவிகித சம்பளம் அறிவித்துள்ளது பிரபல நிறுவனம்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், எல்லா நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஊழியர்கள் சோர்ந்துவிடக்ககூடாது என்பதற்காக, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காக்னிசன்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் ப்ரையன் ஹஃம்ப்ரிஸ், ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் ‘இக்கட்டான இந்த சமயத்திலும், இந்தியா மற்றும் பிலிப்பைன்சில் தொடர்ந்து சேவைகளை வழங்கும் அசோசியேட்ஸ் எனப்படும் இணைப் பணியாளர்கள் மற்றும் அதற்கு கீழ் இருக்கும் பணியாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் மாத சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் கூடுதலாக சம்பளம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ‘இந்த கூடுதல் போனஸ், ஏப்ரல் மாத சம்பளம் உடன் சேர்ந்து அளிக்கப்படும் என்றும், தொடர்ந்து நமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபடுங்கள்’ என்றும் கூறியுள்ளார்.

நியூஜெர்ஸியை தலைமையிடமாக கொண்ட காக்னிசென்ட்டில், இந்தியாவில் மட்டும் 2,03,700 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 1.35 லட்சம் ஊழியர்களுக்கும் மேற்பட்டோர் இணைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் தங்களது சம்பளத்திலிருந்து கூடுதலாக 25 சதவிகிதம் சம்பளம் பெறுவர். கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த முடிவு பணியாளர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

IT, TECHIE, COGNIZANT, SOLUTIONS, EMPLOYEES, GRATITUDE, ALLOWANCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்