ஸாரி...! 'இனி உங்களுக்கு இங்க வேலை இல்ல...' லைஃப்ல செட்டில் ஆகணும்னு 'அந்த' நாட்டுக்கு போனாங்க...! 'இப்போ எல்லாம் போச்சு...' - நாடு திரும்பும் 11,000 இந்தியர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்சிங்கப்பூர் நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் ஆட்குறைப்பு காரணமாக சுமார் 11 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து நாடு திரும்பும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உலகெங்கும் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளின் பெரு மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரிலும் கடந்த மே மாதம் முதல் 17,000 இந்தியர்கள் 120 சிறப்பு விமானங்களில் இந்தியா திரும்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தற்போது நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து நாடு திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் தெரிவித்துள்ளதாவது, இதற்கு முன் சுமார் 17,000 பேர் வேலையில்லாமல் இந்தியா வந்ததை அடுத்து தற்போது புதிதாக இதுவரை 11,000 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் வேலையிழந்தோர், மருத்துவச் சிகிச்சைக்காக நாடு திரும்புவோர், குடும்பச் சூழ்நிலை காரணமாகத் திரும்புவோரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவின் 'வந்தேபாரத்' திட்டத்தின் படி, சிறப்பு விமானங்கள் மூலமாகவே இந்தியா திரும்புகின்றனர்.
மேலும் இந்தியா - சிங்கப்பூர் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா - ஆசியான் ஹேக்கத்தானை ஆண்டு இறுதியில் திட்டமிடபட்டுள்ளது. சிங்கப்பூர் உற்பத்தி கூட்டமைப்புடன் உற்பத்தி கூட்டுறவு வாய்ப்புகளுக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். உலக உற்பத்தி ஸ்தலமாக இந்தியா விளங்க சிங்கப்பூர் முதலீடுகள் உதவும்.
அதுமட்டுமில்லாமல் சிங்கப்பூரானது இந்திய சந்தையின் நீண்டகால அன்னிய முதலீட்டு ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது சிங்கப்பூர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலமாக நம் நாட்டில் மேலும் தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியர்கள் உட்பட 13,000 பேர் வேலை செய்யத் தடை'... 'கொரோனா அச்சுறுத்தலால்'... 'அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள நாடு!'...
- 'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்!'...
- 'இந்த தடுப்பூசி பாதுகாப்பா இருக்கு'... 'தொடர்ந்து உயரும் பாதிப்புக்கு நடுவே'... 'நம்பிக்கை தரும் தகவலால் ஆய்வை தீவிரப்படுத்திய இந்தியா!'...
- 'நாயை பரமாரிக்க ரூ.45 ஆயிரம் சம்பளம்!'.. ‘கல்வித்தகுதி இதுவா?... படிச்ச படிப்பை இப்படியெல்லாமா அவமானப்படுத்துறது?’.. 'வறுத்தெடுத்த' இணையவாசிகள்! உண்மை என்ன?
- 'செம்ம அடி!.. சீனாவுக்கு தாய்லாந்து வைத்த செக்!.. கேஆர்ஏ கால்வாய் திட்டம் ரத்து!'.. அடுத்தது என்ன?
- 'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்!'...
- 'போச்சு... ஜாம்பவானுக்கே இந்த நிலையா!?.. இத்தனை பேர கிளம்ப சொல்லிட்டாங்க'!... ஊழியர்களுக்கு 'இடி'யாக விழுந்த அறிவிப்பு!
- 'இத்தனை பாதிப்புக்கு நடுவிலும்'... 'புதிதாக 12,000 பேருக்கு வேலை'... 'பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!'...
- மார்க் & ஸ்பென்ஸரில் 'நைட் ஷிஃப்ட் வேலை'.. '1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பும்'.. 'கோடீஸ்வர பெண்ணின்' ஆச்சர்யமூட்டும் 'செயல்'!
- உங்க எல்லாருக்கும் நிரந்தரமா 'work from home' தான்,,.. 'இந்தியாவில்' முதல் முறையாக அறிவித்த முன்னணி 'நிறுவனம்'!!!