11 வயசுல சொந்த தொழில்.. மாசம் ரூ. 1 கோடி வருமானம்.. ரிட்டையர் ஆக இருப்பதாக அறிவித்த சிறுமி.. அசுர வளர்ச்சியின் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் பொம்மைகளை உருவாக்கி அதன்மூலம் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது தொழிலில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
Images are subject to © copyright to their respective owners.
பொதுவாக 11 வயது குழந்தைகள் என்ன செய்வார்கள்? தங்களுக்கு பிடித்த பொம்மைகளை வாங்க வேண்டும் என தங்களது பெற்றோரிடம் கேட்பார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்சி கர்டிஸ் (Pixie Curtis) எனும் சிறுமி சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அதுவும் பொம்மைகளை உருவாக்கி அதனை திறம்பட விற்பனையும் செய்து வருகிறார். கொரோனா சமயத்தில் உலகமே ஸ்தம்பித்து இருந்த நிலையில் தனது வீட்டில் முடங்கியிருந்த பிக்சிக்கு சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என தோன்றியிருக்கிறது.
Image Credit: @roxyjacenko/ Instagram
பொம்மைகள் செய்வதில் பிக்சி கில்லாடி. ஆகவே, அதையே தனது தொழிலாக எடுத்துக்கொண்டார் அவர். பிக்சியின் தாய் ராக்சி ஜேசன்கோ (Roxy Jacenko) பிரபல மக்கள் தொடர்பு ஆலோசகர் வேறு. இதன்மூலம், தனது பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது? வியாபாரத்தை எவ்வாறு லாபகரமானதாக மாற்றுவது? என ஆலோசனை வழங்கியுள்ளார் ராக்சி. அதன் பலனாக பிக்சியின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.
எந்த அளவுக்கு என்றால் மாதம் 1.1 கோடி ரூபாய் (110,000 யூரோ) அளவுக்கு பொம்மைகளை விற்பனை செய்து வருகிறார் பிக்சி. கூடவே சிறுவர்களுக்கான பிற மேக்கப் பொருட்களும் விற்பனையாகின்றன. சமீபத்தில் தன்னுடைய 11 வது பிறந்தநாளை பிக்சி கொண்டாடினார். அதற்கு அவர் செலவிட்ட தொகை மட்டும் சுமார் 23 லட்சம் என சொல்லப்படுகிறது. சிறுவயதிலேயே வியாபாரத்தில் உச்சம் தொட்ட பிக்சி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் தனக்கென ஒரு சொகுசு காரையும் வாங்கியுள்ளார்.
Image Credit: @roxyjacenko/ Instagram
இந்நிலையில் தனது தொழிலில் இருந்து சற்றே விலகி இருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தனது கல்வியில் கவனத்தை திருப்ப உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். இதுபற்றி அவரது தாய் ராக்சி பேசுகையில்,"பிக்சி தனது உயர்நிலை கல்வியை பெற இருப்பதால் தொழிலில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இதைப்பற்றி நாங்கள் விவாதித்து வந்தோம். அவள் பள்ளி படிப்பில் ஆர்வம் செலுத்தவேண்டிய நேரம் இது. இருப்பினும் அவளுடைய தொழில் தொடர்ந்து நடைபெறும். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அதிலும் ஈடுபடுவார்" என தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என் செல்லத்தோட தான்".. இப்படியும் ஒரு ஆசையா?.. ஷாக்-ஆன இணைய உலகம்..!
- கோவையை கலக்கும் ஐடி மன்னன் - inspiring டாக் - அந்த ஊர choose பண்ண என்ன காரணம் !
- பிதாமகன் லேகியம் சாப்டாங்களோ.. காத்த பிரிச்சி.. கோடில காசு பார்த்த ‘வைரல்’ பெண்!!
- 'ஃபேஸ்புக்'ல வொர்க் பண்றப்போ 'சீக்ரெட்'டா எல்லாத்தையும் 'ஜெராக்ஸ்' எடுத்து வச்சுருக்காங்க...! ஒவ்வொண்ணா 'ரிலீஸ்' செய்த 'விசில் ப்ளோயர்' யாரு தெரியுமா...? - 'அதிர' வைக்கும் தகவல்...!
- VIDEO: ஓவர் சேட்டையா இருக்கே...! 'அடேய், இந்த விஷயம் தெரிஞ்சா...' - 'அவங்க' ரொம்ப 'ஃபீல்' பண்ணுவாங்க டா...!
- 'அரசியலுக்கு 'ரெஸ்ட்' கொடுத்த... அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்'!.. ஏன் இந்த திடீர் முடிவு?
- அமேசான் நிறுவன அதிபர் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு! ஏன் இப்படி செஞ்சார்? - அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- “ஆபீஸ் ஜூம் மீட்டிங்ல ஆடு பங்குபெறுதா?”.. 'மொத்த வாழ்வையும் முடக்கிய லாக்டவுன்!'.. ‘நம்பவே முடியாத’ ஐடியாவை வைத்து.. அடி ‘தூள்’ பண்ணிய பெண்!
- "இந்த கொரோனா காலத்திலும்.. குவியும் முதலீட்டாளர்கள்!.. 121 ஆயிரம் வேலை வாய்ப்பு".. 2021 ஆரம்பத்திலேயே கலக்கும் தமிழக அரசு!
- கிடுகிடுவென அதிகரித்த புதிய வகை கொரோனா!.. மளமளவென சரிந்த ஐரோப்பிய, இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் சொல்வது என்ன?