ஆயிரம், ரெண்டாயிரம் இல்ல.. மொத்தமா '10 லட்சம்' பேர் வீட்டுக்கு அனுப்பப்படலாம்.. 'கலங்கும்' ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் குறித்த செய்திகள் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தமாக கார்கள், பைக்குகள் விற்பனை படுமோசமாக சரிந்துள்ளது.குறிப்பாக 2018 செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது இந்த வருட டிசம்பர் விற்பனை  23.7% என்றளவில் படுமோசமாக சரிந்துள்ளது.

இதனால் கார்கள் உற்பத்தி தொடங்கி பல்வேறு விதத்திலும் ஆட்டோமொபைல் துறை அடிவாங்கி வருகிறது. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் கார்கள் விற்பனை 33% என்றளவிலும், பைக்குகள் விற்பனை 22% என்றளவிலும் சரிந்துள்ளது. உச்சபட்சமாக கனரக வாகனங்கள் விற்பனை 39% சரிந்துள்ளது.

இந்த சரிவால் இந்தியாவின் முன்னணி கனரக வாகன தயாரிப்பாளர்களான அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பலத்த அடி வாங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாகத் தான் அசோக் லேலண்ட் அவ்வப்போது வேலையில்லா நாட்களை அறிவித்து வருகிறது.ஒட்டுமொத்தமாக கார், பைக், கனரக வாகன விற்பனை 22.4% சரிந்துள்ளது.விற்பனை சரிவு தொடர்பான சிக்கல்களால் கடந்த சில மாதங்களில் 275-க்கும் அதிகமான டீலர்கள் தங்கள் கடையை மூடிவிட்டார்கள். இதனால் சுமார் 30,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

ACMA (Automotive Components Manufacturers Association of India) கணிப்பின் படி, ஏற்கனவே கடந்த சில மாதங்களில் இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்களில் சுமார் 1,00,000 பேருக்கு வேலை பறி போய்விட்டதாகவும், மேற்கொண்டு, இந்திய ஆட்டோமொபைல் துறையில், இதே மந்த நிலை நீடித்தால், அடுத்த 3 - 4 மாதங்களில், மேலும் 10 லட்சம் பேர் வரை தங்கள் வேலையை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் என்றால் வெறுமனே ஆட்டோமொபைல் துறை மட்டுமல்ல. இந்த ஒரு துறையை சார்ந்து பெட்ரோல் விற்பனை, இன்சூரன்ஸ், மெக்கானிக்குகள், வாகனங்களுக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என கணக்கில் வராத இன்னும் பல லட்சம் பேரின் வேலை வாய்ப்பும் இந்த ஆட்டோமொபைல் துறையைத் தான் நம்பி இருக்கிறது.

இந்த மந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் வரும் டிசம்பருக்குள் சுமார் 10 லட்சம் பேரின் வேலை பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஊழியர்கள் பலரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

JOBS, AUTOMOBILE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்