கார், ஸ்கூட்டர் என வாகன உற்பத்தியில் களம் இறங்கும் Mi நிறுவனம்...! இந்தியாவில் வரவேற்பு கிடைக்குமா?

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

சீன எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான ஷாவ்மி (Mi) புதிதாக ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் இந்த வாகன உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கப் போவதாக Mi தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

பெய்ஜிங் வாகன உற்பத்தித் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்ய உள்ளதாக ஷாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பெய்ஜிங்-ல் தொழில்முறை தலைமை அலுவலகம், விற்பனை தலைமை அலுவலகம், R&D என அத்தனைக்கும் பெரிய பட்ஜெட்டில் அலுவலகங்கள் அமைய உள்ளனவாம்.

ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய இரண்டு தொழிற்சாலைகள் அமைய உள்ளன. ஒரு தொழிற்சாலைக்கு 1.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி ஆகும். ஷாவ்மி Mi சார்பில் முதல் எலெக்ட்ரிக் கார் வருகிற 2024-ம் ஆண்டு விற்பனைக்காக வெளி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி நிறுவனர் மற்றும் சிஇஓ லெய் ஜுன் தான் ஆட்டோமொபைல் தொழிலையும் தற்போது கவனித்துக் கொள்கிறார்.

தற்போதைய சூழலில் இந்த வாகன தொழிற்சாலைக்கு 300 ஊழியர்கள் முதற்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்கு எலெக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு மட்டும் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக ஷாவ்மி தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் பைக் மற்றும் கார் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்க கடந்த 5 மாதங்களாக பெரிய குழு அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள், நேரடி ஆய்வுகள், தொழில் கூட்டணிகள் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளன. தொழில்நுட்ப பிரிவின் மெருகேற்றுதல் பணிக்காக மட்டும் சுமார் 77.37 மில்லியன் டாலர்களை ஷாவ்மி முதலீடு செய்து உள்ளதாம்.

AUTO, MI CARS, MI SCOOTERS, XIAOMI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்