தண்டவாளத்தில் போகும் பஸ், ரோட்டில் போகும் ரயில்..! குழப்பமா இருக்கா? அப்டி ஒரு வாகனம் தாங்க இது!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

சாலையில் ரயில் செல்கிறது என்றும் சொல்லலாம், தண்டவாளத்தில் பஸ் போகிறது என்றும் சொல்லலாம். இந்த வாகனத்துக்கு இரண்டுமே பொருந்தும்.

Advertising
>
Advertising

ஜப்பான் நாடு பலப்பல அதிசய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையில் புதிதாக ஒரு வாகனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஜப்பான். DMV (Dual Mode Vehicle) என்னும் வாகனம் தண்டவாளத்திலும் ஓடும், சாலையிலும் ஓடும் திறன் கொண்டது. ஜப்பான் நாட்டின் டோஷிமா மாகாணத்தில் கையோ என்னும் சிறிய நகரத்தில் இந்த வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜப்பான்.

மினி பஸ் போன்றும் மெட்ரோ ரயில் போன்றும் கலந்தாற்போல் தோற்றம் அளிக்கிறது இந்த DMV (Dual Mode Vehicle) வாகனம். தண்டவாளத்தில் போகும் போது எஃகு சக்கரங்களும் சாலையில் இறங்கும் போது ரப்பர் சக்கரங்களும் மாறிவிடுகின்றன. சக்கரமே தன்னைத்தானே தூக்கிக்கொண்டு சாலை, தண்டவாளம் என மாறிக்கொள்ளும் தொழில்நுட்பம் பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

இந்த எஃகு சக்கரங்களும் ரப்பர் சக்கரங்களும் மாறுவதற்கு 15 விநாடிகள் தான் ஆகுமாம். இந்த DMV வாகனத்தில் சுமார் 21 பேர் வரையில் பயணிக்கலாம். ரயில் பாதையில் மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த வாகனம், சாலைகளில் இறங்கினால் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பறக்கிறது. இந்த வாகனம் மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீலம், சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளனர். ஜப்பானின் கடற்கரை நகரங்களில் கடற்கரையை ஒட்டியவாக்கில் இந்த வாகனம் பயணிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் செல்கிறது.

AUTO, ஜப்பான், பஸ், ரயில், JAPAN, BUS LIKE TRAIN, DUAL MODE VEHICLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்