மவுசு குறையாத ராயல் என்ஃபீல்டு- இரண்டே நிமிடங்களில் விற்று முடிந்த புது பைக்!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்இந்தியாவைப் பொறுத்தவரை என்ன தான் பல பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு என்று தனி மவுசு எப்போதும் இருந்து தான் வருகிறது.
குறிப்பாக, மற்ற அனைத்து இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை விட ராயல் என்ஃபீல்டு எப்போதும் தங்கள் வாகனங்களுக்கு விலையேற்றத்தை விரைவாக அறிவிக்கும். அப்படி இருந்தும் அதற்கான வாடிக்கையாளர்கள் குறையவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இதற்கு காரணம், கடந்த 10 - 15 ஆண்டுகளாக மக்கள் இடத்தில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம், டிரெக்கிங் செல்வது, வெகு தூரம் பைக் டிராவல் செய்வது என சொல்லிக் கொண்டே போகலாம்.
ராயல் என்ஃபீல்டு தன் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருவதை மேலும் ஒரு சம்பவம் ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது 650 டிவின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. அப்போது முதலே அந்த பைக்கிற்கு எதிர்பார்ப்பு வானளவு இருந்தது.
இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக்கானது, உலக அளவில் வெறும் 480 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது, ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை மேலும் சூடேற்றியது. அதில் 120 மட்டுமே இந்தியாவுக்கு என்று அந்த நிறுவனம் ஒதுக்கி இருந்தது.
டிசம்பர் 6 ஆம் தேதியான நேற்று, 650 டிவின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளை முதலில் வாங்க வரும் 120 பேருக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படியான நடைமுறைக்கு கீழ் விற்பனை ஆரம்பித்த முதல் 2 நிமிடங்களில் மொத்தம் இருந்த 120 யூனிட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைப் பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 44,830 யூனிட்டுகளை இந்தியாவில் விற்றுள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடும் போது 24 சதவீதம் குறைவு. அதே நேரத்தில், ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தையும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தையும் ஒப்பிடும் போது 45 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது ராயல் என்ஃபீல்டு.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்ன பாய்ஸ் ரெடியா’! சாப்பாடு போட்டியில் ஜெயிச்சா ‘Royal Enfield’ பைக் பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!
- பைக்கில் சென்ற மாணவர் மீது 'மோதி' ஏறி இறங்கிய கல்லூரி பேருந்து... நண்பர்களின் கண்முன்னே 'துடிதுடித்து' இறந்த மாணவர்... கதறியழுத மாணவ,மாணவிகள்!
- 'கொஞ்ச நேரம் நின்னுட்டு போலாம் மச்சான்'... பைக்கை விட்டு இறங்கிய 'நண்பர்கள்'... கட்டுப்பாட்டை இழந்த லாரிக்கடியில் 'சிக்கி'... சம்பவ இடத்திலேயே '5 பேர்' பலி!
- புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா உள்ளிட்ட 'சென்னையின்' முக்கிய இடங்களில்... 'வாகனங்கள்' நுழையத்தடை... விவரம் உள்ளே!
- விபரீத 'செல்பி' ஆசை... ஆக்ரோஷத்தில் பைக்கை 'கீழே' சாய்த்த யானை... நூலிழையில் தப்பிய இளைஞர்கள்!
- ‘6 பைக், 1 சொகுசு கார் இருந்தும்’.. ‘விபரீதத்தில் முடிந்த தொழிலதிபர் மகனின் ஆசை’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- 'பைக்கில் சென்ற இளைஞர்கள்'...'திடீரென பதுங்கிப் பாய்ந்த 'சிறுத்தை'...உதறல் எடுக்க வைக்கும் வீடியோ!
- இப்பல்லாம் 'ஸ்பாட்' பனிஷ்மென்ட் தான்.. 'நோ' வெயிட்டிங்.. வைரல் வீடியோ!
- 'ஒழுங்கா' குடுத்துரு .. 'துப்பாக்கி' முனையில் பைக் கொள்ளை.. 'திருடனுக்கு' நேர்ந்த விபரீதம்!
- Video: நின்னுக்கிட்டே வண்டி ஓட்டும் 'புல்லட்' பாண்டி.. என்ன ஆச்சு நீங்களே பாருங்க!