‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல’.. 3000 Electric Bike-ஐ திரும்ப பெறும் ‘பிரபல’ நிறுவனம்.. இதுதான் காரணமா..?
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்பிரபல மின்சார இருசக்கர வாகன நிறுவனம் 3000-க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் பல நிறுவனங்கள் இந்திய சந்தையைக் குறிவைத்துள்ளன. ஆனால் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகினாவா (Okinawa) தனது தயாரிப்பான ப்ரைஸ் புரோ (Praise Pro) ஸ்கூட்டரை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி சுமார் 3215 ப்ரைஸ் புரோ ஸ்கூட்டர்களை திரும்ப பெற்று ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பேட்டரி தொடர்பான சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அதனைக் கண்டறிந்து, உடனடியாக சீர் செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வாகன ஹெல்த்-செக் அப் சார்ந்த முகாம்களில் ஒரு பகுதி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ஒகினாவா டீலர்ஷிப்களில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வில் சிக்கல் இருப்பது உறுதியானால் இலவசமாக அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தனித்தனியே தங்கள் தரப்பில் இருந்து தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும் ஒகினாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளின் நலன் கருதி இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்