புதிய 'கார்' வாங்கலாம்னு இருந்தவர்களுக்கு 'இடியென' இறங்கிய செய்தி...! 'எங்களுக்கு வேற வழி தெரியல...' - வெளியான அதிர்ச்சி தகவல்...!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

கொரோனா ஊரடங்கினால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. மக்கள் தினசரி வாங்கும் உணவுப் பொருட்களில் இருந்து கட்டுமானப் பொருட்கள் வரை இந்த விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக உற்பத்தியில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விற்பனையில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் காரின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளார்கள்.

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, தனது swift மற்றும் சிஎன்ஜி வகை கார்களின் விலையை ரூ.15 ஆயிரம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. இது பற்றிய தகவல் இன்று (12-07-2021) வெளியாகியுள்ளது. மேலும் அறிவிப்பு வெளியான இன்று முதலே விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

முன்னதாக, swift வகை கார்கள் 5.73 லட்சம் ரூபாய் முதல் 8.27 லட்சம் ரூபாய்  வரைக்கும் விற்கப்பட்டது. இது நாட்டின் தலைநகர் டில்லிக்கான விலை ஆகும். இந்த விலையானது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வித்தியாசப்படும். சிஎன்ஜி மாடல்கள் 4.43 லட்சம் ரூபாய் முதல் 9.36 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக, ஏற்கனவே சில மாடல் கார்களின் விலையை கடந்த ஏப்ரல் மாதம்தான் மாருதி சுசூகி உயர்த்தியிருந்தது நினைவிருக்கலாம். பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது தற்போது கார்களின் விளையும் உயரத் தொடங்கியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்