தாத்தாவுக்கு ‘மரியாதை’.. பல வருஷம் கழிச்சு ‘பேரன்’ செஞ்ச செயல்.. ஆச்சரியத்தில் உறைந்த அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

காரின் நம்பர் பிளேட்டை நபர் ஒருவர் கோடியை கொட்டி ஏலத்தில் எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் காரின் நம்பர் பிளேட் ஒன்று 128,800 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ. 1.26 கோடி) விலைக்கு ஏலம் போயுள்ளது. இந்த தொகை உலகின் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை விட அதிகம் என்பதால், ஏலம் விட்ட அதிகாரிகளே ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஏலத்தில் இத்தனை கோடிகளை பெற்றுத்தந்த நம்பர் பிளேட் முதன்முதலில் சார்லஸ் தாம்சன் என்பவரால் பிர்மிங்காமில் 1902ம் ஆண்டு பெறப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில் வாகனங்களை காண்பது அரிய நிகழ்வாக இருந்துள்ளது. அதனால் இந்த நம்பர் பிளேட் மற்றும் வாகனம் மிக எளிதில் காணக்கூடியதாக இருந்துள்ளது.

இதே நம்பர் பிளேட் ஜாகுவார், ஆஸ்டின் ஏ35எஸ், மின் மற்றும் போர்டு கார்டினா போன்ற மாடல்களுக்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த நம்பர் பிளேட் பயன்படுத்தாமல் இருந்துள்ளது.

சமீபத்தில் சில்வர்ஸ்டோன் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தால் இந்த நம்பர் ஏலம் விடப்பட்டது. அதில் 1.26 கோடி ரூபாய்க்கு இந்த நம்பர் பிளேட் ஏலம் போயுள்ளது. சார்ல்ஸ் தாம்சனின் பேரன், தனது தாத்தாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 'O 10’ என்ற இந்த நம்பர் பிளேட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஏலம் எடுத்தவர் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்