தமிழ்நாட்டில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா? வாங்க.. வாங்க.. நம்ம பசங்கலாம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

டெஸ்லா கார் நிறுவனரான எலான் மஸ்க்கிடம் தமிழகத்தில் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க இணையத்தில் பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Advertising
>
Advertising

சென்னையில் பல முன்னணி வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவங்களான போர்டு, ரெனால்ட் நிசான், ஹூண்டாய், ஃபோர்டு இருந்து வரும் நிலையில் தற்போது பலரின் கவனம் டெஸ்லா பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியாவில் டெஸ்லா:

சென்னையில் முதலீடு செய்துள்ளா இந்த நிறுவனங்கள் மூலம் இங்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளும் பெருகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை அமைக்க எலான் மஸ்க் முயன்று வருவதும் அனைவருக்கும் தெரிந்ததே.

டெஸ்லா கார்கள் மிக அதிக விலை இருந்தாலும் இந்தியாவில் அதனை வாங்க பல பணக்காரர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதன் இறக்குமதி வரியோடு சேர்த்தால் இந்தியாவில் தயாராகும் பல கார்களை ஒரே நாளில் வாங்கிவிடலாம் என்பது போல இருக்கும்.

எப்போது தொடங்குவீர்கள்?

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் எலான் மஸ்கிடம் நெட்டிசன் ஒருவர் இந்தியாவில் டெஸ்லாவை எப்போது தொடங்குவீர்கள் என்பது குறித்து ஏதேனும் தகவல் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு எலான் மஸ்க்கும் பதிலளித்துள்ளார். அதில், 'நிறைய சவால்களுடன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என தெரிவித்துள்ளார். இதையடுத்து டெஸ்லாவை தங்கள் மாநிலங்களில் தொடங்குமாறு தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

மன்னார்குடி எம்எல்ஏ:

அவர்களை போல தமிழக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் தமிழகத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்குமாறு கேட்டுள்ளார்.

தமிழக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவின் டெட்ராய்டான தமிழகத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம் எலான் மஸ்க். தமிழகத்தில் தொழிற்சாலையை அமைப்பது மிகவும் எளிதான காரியம். நீங்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்துங்கள், எல்லா சவால்களிலிருந்தும் மீள எங்களது அதி திறமைவாய்ந்த இளைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள்' என கோரிக்கை விடுத்துள்ளார். இதனை பார்த்த பலர் அதற்கு ஆதரவு அளித்தாலும் பலர் தமிழகத்தில் தொழிற்சாலை வேண்டாம் என அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

நெட்டிசன்கள் எதிர்ப்பு:

அதில் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு அறிவுரை கூறும் வகையில், எங்கள் தமிழகத்தில் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்க ஃபாக்ஸ்கான், நோக்கியா, போர்டு, ஹூண்டாய் உள்ளிட்ட மோட்டார் நிறுவனங்களிடம் இருந்து மதிப்பாய்வு பெற்றுக் கொண்டு வாருங்கள். இவையெல்லாம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

ஆனால், எலான் மஸ்க்கோ தமிழகத்தில் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது சரியான முடிவாக இருக்கும் எனவும், இங்கு ஏற்கனவே இருக்கும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு சிறப்பான பாதை உள்ளன என நினைப்பதாக கூறியுள்ளார்.

ELON MUSK, TESLA, CAR, TAMIL NADU, எலான் மஸ்க், டெஸ்லா, கார், தமிழ்நாடு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்