டெஸ்லா காரை எப்போ 'இந்தியாவுக்கு' கொண்டு வரப்போறீங்க? எலான் மஸ்க் சொன்ன அதிருப்தி பதில்!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பதில் அரசுடன் முரண்பாடு ஏற்படுவதாக எலான் மஸ்க் தான் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

உலக அளவில் பிரபலமான டெஸ்லா கார் வாங்குவது என்பது இந்தியர்களுக்கு ஒரு பெரிய கனவை அடையும் சம்பவமாகவே இருக்கிறது. ஏனென்றால் இது அமெரிக்காவில் இருந்து இம்போர்ட் பண்ணப்படும் கார் என்பதால் இதன் வரி என்பது காரின் விலையை விட இருமடங்காக இருக்கும்.

இறக்குமதி வரி அதிகம்:

சில நாட்களுக்கு முன் யூடியூபர் ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்கை டாக் செய்து இந்தியாவில் டெஸ்லா கார்களை லான்ச் செய்யும் படி கேட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க்கும் 'எங்களுக்கும் ஆசை தான் ஆனால் இந்த இறக்குமதி வரி தான் அதிகம்' என பதிலுக்கு ட்வீட் செய்திருந்தார். இந்த செய்தி இந்திய அளவில் ஹெட் லைன்ஸ் ஆனது. அதையடுத்து டெஸ்லா நிறுவனம் இந்தியப் பிரிவுக்கானப் பெயரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் டெஸ்லா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.

இந்திய அரசு மீது அதிருப்தி:

இந்நிலையில் எலான் மஸ்க் இந்திய அரசு மீது அதிருப்தி இருப்பதாக தெரிவித்தார். இதற்கு காரணம் எப்போதும் போல எலெக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரி தான். ஆனால் டெஸ்லா நிறுவனமோ இறக்குமதி வரியை குறைக்குமாறு வலியுறுத்தி வருகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்கள் மீது 60% முதல் 110% வரை இந்தியாவில் வரி விதிக்கப்படுகிறது. காப்பீடு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்தையும் சேர்க்கும்போது ஒரு காரின் விலை 40,000 டாலராக (ரூ.30 லட்சம்) உள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு வராது:

இதன் காரணமாக மத்திய அரசுக்கு டெஸ்லா நிறுவனம் கடிதமும் எழுதியது. அந்தக் கடிதத்தில் '110% வரை வரி விதிப்பதால் இறக்குமதி கார் 40,000 டாலரை எட்டி விடுகிறது. முற்றிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்த இந்த கார்களுக்கு ஒரே நிலையான வரியாக 40% வரியை விதிக்கலாம். வரி குறைப்பு நடவடிக்கையால் இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றும் டெஸ்லா குறிப்பிட்டது.

எலான் மஸ்க் இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு முதலே டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்க விரும்பினார். அப்போதும், வரி விதிப்பு குறித்து டெஸ்லா நிறுவனமும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் 'அரசிடமிருந்து எத்தகைய உதவியை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிவித்தால் அதை முழுவதுமாக அளிக்க அரசு தயாராக உள்ளது' என குறிப்பிட்டுள்ளனர்.

ELON MUSK, CONFLICT, TESLA, CARS, INDIA, டெஸ்லா, எலான் மஸ்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்