மீண்டும் ஏறப்போகும் கார் விலை! புதிய கார் வாங்க போறீங்களா… உடனே பாருங்க..!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

இந்தியா இந்த ஆண்டு மட்டும் தொடர்ந்து ஏகப்பட்ட முறை கார் விலை உயர்வு அறிவிப்பை கேட்டு வருகிறது. உள்ளீட்டுச் செலவுகள் எனக் காரணம் காட்டப்பட்டு தொடர்ந்து கார்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertising
>
Advertising

இந்தியாவில் உள்ள பல கார் நிறுவனங்களும் தொடர்ச்சியாக 4-வது முறையாக கால் விலைப் பட்டியலை அதிகரிக்கத் தயாராகி உள்ளனர். கார் நிறுவனங்களுக்குள் நிலவும் வழக்கப்படி இந்த 4-வது விலை ஏற்றம் வருகிற ஜனவரி முதல் வாரம் முதல் அமல் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து எம்ஜி மோட்டார்ஸ் தலைவர் ராஜீவ் கூறுகையில், “இந்த அதிகரிக்கும் விலை பளுவை வாடிக்கையாளர்கள் மேல் நாங்கள் ஏற்றுவது இல்லை.

நடக்கும் சூழ்நிலைகளைப் பார்த்தால் இன்னும் பல முறை கார் விலை உயர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உண்டு. இந்த விலை ஏற்றம் நிச்சயமாக பணப்புழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில் உற்பத்தி விலையிலும் இதனது தாக்கம் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வால்வோ நிறுவனத் தலைவர் விநோத் அகர்வால் கூறுகையில், “உற்பத்தி விலைக்கும் விற்பனை விலைக்கும் தற்போது எந்த சம்பந்தமும் இல்லை. கண்டிப்பாக வாகன விலை உயர்வு தவிர்க்க முடியாததுதான். ஆனால், எங்களுக்கு எவ்வளவு லாபம் வரும் என்பது எங்கள் கைகளில் இல்லை” எனக் கூறியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு பேசெஞ்சர் வாகனங்களுக்கு இருந்த சந்தை நிலை தற்போது மிகவும் தாழ்ந்து காணப்படுவதாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக நிலவும் பண வீக்கம் மற்றும் தொடர்ச்சியான பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள் கார் உற்பத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

AUTO, CAR PRICE, CAR SALES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்