கார் லோன் வாங்கியவர்கள் 'இதை' செய்ய மறப்பதால் ஏற்படும் சிக்கல்..!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

வீட்டு லோன் வாங்குவதை விட கார் லோன் வாங்குவது நம்ம ஊரில் அதிகம். காரணம், வீட்டு லோன், பெர்சனல் லோன்களை விட கார் லோன் எளிதாகக் கிடைத்துவிடும். மதிப்புமிக்க பொருள் ஒன்றின் மீது வாங்குவதால் லோன் எளிதில் கிடைக்கிறது. லோன் வாங்கும் போது பல கட்டங்களிலும் கவனம் உடன் செயல்படும் நாம் லோன் முடிந்த பின்பு செய்ய வேண்டிய முக்கியமான பணியை மறந்துவிடுகிறோம்.

Advertising
>
Advertising

நம்மில் பெரும்பாலானோர் கார் வாங்குவது வங்கிக்கடன் பெற்றுதான். கையில் ரொக்கமாக இருந்தால் கூட குறைந்த வட்டி விகிதம் காரணமாக லோனில் கார் வாங்குவோரும் இருக்கின்றனர். கார் லோன் முடிந்த பின் என்ன செய்ய வேண்டும்?

வங்கிக் கடனில் கார் வாங்கியிருந்தால் அதன் ஆர்.சி புத்தகத்திலேயே அது பதியப்பட்டிருக்கும். Hypothecated to *** bank என இருக்கும். இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் அப்படித்தான் இருக்கும். இது எதற்காக என்றால் கடன் பெற்ற வங்கிக்குத் தெரியாமல் காரை விற்கவோ, டோடல் டேமேஜ் இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்யவோ கூடாது என்பதற்காகத்தான்.

சோம்பேறித்தனம் வேண்டாம்:

லோன் முழுவதுமாக கட்டி முடித்த பின் பலரும் சோம்பேறித்தனம் காரணமாக இவற்றை நீக்க மறந்துவிடுகின்றனர். இதனால் திடீரென விற்க நினைக்கும் போதோ, இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்யும் போதோ பிரச்சனையில் வந்து முடிகிறது. கடைசி இ.எம்.ஐ கட்டி முடித்த பிறகு வங்கியில் லோன் கணக்கை முடித்து NOC தருவார்கள்.

NOC பெறுவது அவசியம்:

அதனுடன் இமெயில் வெரிபிகேசன் ஒன்றும் அனுப்புவார்கள். இந்த NOC 90 நாட்கள் செல்லுபடியாகும். அதற்கு முன்பாக ஆர்டிஓ அலுவலகம் சென்று பழைய ஆர்.சி, இன்சூரன்ஸ், NOC, இமெயில் வெரிபிகேசன், வாகன மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அனைத்தையும் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும். பிறகு சில நாட்களில் ஆர்சி புத்தகத்தில் (அட்டையில்) வங்கியின் பெயர் நீக்கப்பட்டு நாம் மட்டுமே முழு முதலாளி ஆகிவிடலாம்.

இன்சூரன்ஸ் புதுப்பிப்பு:

அடுத்து இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது மறக்காமல் ஏஜண்ட்டிடம் கூறி அதிலும் வங்கிப் பெயரை நீக்க வேண்டும். NOC வாங்கி 90 நாட்களை கடந்துவிட்டால் மீண்டும் 500 ரூபாய் பணம் கட்டி புது NOC வாங்கலாம். அதன் வேலிடிட்டியும் 90 நாட்கள் தான்.

நிறைய பேர் இதை மறந்து, விற்கும் போதோ அல்லது விபத்திற்கு பிறகோ அவசர அவசரமாக அலைவதைப் பார்க்கிறோம். சில இடங்களில் வங்கியும் NOC அனுப்புவதில்லை, நாம் தான் நினைவில் வைத்து போய் கேட்டு வாங்க வேண்டும். எனவே லோன் முடிந்த உடன் முதல் வேலையாக ஹைபோதிகேசனை நீக்கிவிடவும்.

AUTO, CAR LOANS, VEHICLE LOANS, கார் லோன், வாகனக் கடன், CLOSURE PROCEDURE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்