ஒரு கார் வாங்கி... இன்னொரு கார 'இலவசமா' ஓட்டிட்டு போங்க... அதிரடி ஆஃபரை 'அள்ளி' வழங்கிய நாடு!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

கொரோனா தொற்றால் அத்தியாவசிய பொருட்கள் தவிர பிற பொருட்களை வாங்கும் நிலையில் மக்கள் இல்லை. வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு போன்ற காரணங்களால் பணத்தை சிக்கனமாக செலவு செய்யவே விரும்புகின்றனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் அடிவாங்கி இருக்கின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிவிப்பின்படி ஹூண்டாயின் Santa Fe சொகுசுக் காரின் விலை இந்திய மதிப்பில் 38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய். இந்த காரை வாங்கினால் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Reina Sedan கார் இலவசமாக கிடைக்கும். இது இல்லாவிடில், ஆஃபரைப் பொறுத்து 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Accent கார் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வெறும் 1,500 ரூபாய் கொடுத்தால் புதிய காரை ஓட்டிச் செல்லலாம், மீதித்தொகையை தவணையில் கட்டி கொள்ளலாம் என இறங்கி வந்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் வெறும் 133 கார்கள் மட்டுமே விற்பனை ஆனதால் இப்படி விதவிதமான விற்பனையில் கார் நிறுவனங்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்