வேறலெவல் செய்த ஆனந்த் மகேந்திரா... வில்லேஜ் விஞ்ஞானிக்கு செம்ம சர்ப்ரைஸ்..!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்வில்லேஜ் விஞ்ஞானி ஒருவரின் அசத்தல் முயற்சியை பாராட்டும் வகையில் மஹிந்திரா நிறுவத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு செம 'சர்ப்ரைஸ்' கொடுத்துள்ளார்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் தத்தத்ராயா. இவர் ஒரு கொள்ளர் ஆக பணியாற்றி வருகிறார். பழைய இரும்பு உதிரி வாகன பாகங்களைக் கொண்டு ஒரு ஜீப் மாடலையே உருவாக்கி உள்ளார். சரியான கல்வி இல்லை என்றாலும் தனக்குத் தெரிந்த அனுபவத்தைக் கொண்டு பழைய வாகனங்களின் உதிரி பாகங்களை வைத்தே ஒரு ஜீப்-ஐ உருவாக்கிவிட்டார்.
தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த ஜீப் கட்டுமானப் பணியைக் கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் தத்தத்ராயா. இந்த அசத்தலான ஐடியா மற்றும் முயற்சி மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. தத்தத்ராயாவின் அசத்தல் முயற்சியின் வீடியோ பதிவு ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா, “இந்த வாகனம் கண்டிப்பாக எந்தவொரு விதிமுறைகளின் அடிப்படையிலும் உருவானது இல்லை. ஆனால், அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது மக்களின் ‘கொஞ்சமே அதிகம்’ என்னும் கொள்கை வியக்க வைக்கிறது. தாங்கள் இயங்குவதற்காக அவர்களின் ஆர்வம் சிறப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உதிரி உடைந்த பாகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட வாகனத்தை எப்படி இயக்குவது? என்பது குறித்தும் வீடியோவாக அந்த வில்லேஜ் விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். அதையும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். வெறும் 60 ஆயிரம் ரூபாயை முதலீடு ஆகக் கொண்டு இந்த வாகனத்தை உருவாக்கியதாக தத்தத்ராயா தெரிவித்துள்ளார்.
இரு சக்கர வாகனங்களில் உள்ளது போல் ‘கி-ஸ்டார்ட்’ செய்து இந்த ஜீப் வடிவ வாகனத்தை இயக்கலாம் என விளக்கி உள்ளார் தத்தத்ராயா. இடது கைப்புறம் இயக்கும் படியிலான வாகனம் ஆக இந்த உடைந்த, உதிரி பாக ஜீப் கார் தயார் செய்யப்பட்டுள்ளது. தத்தத்ராயாவின் முயற்சிக்கு பரிசாக அவருக்கும் மஹிந்திராவின் பொலேரோ காரை பரிசாக அளிப்பதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
மேலும், அந்த உதிரி, உடைந்த பாகங்களால் உருவான ஜீப்-ஐ தனது மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் காட்சிப்படுத்தி பலருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும்படி வைக்கப் போகிறாராம் ஆனந்த் மஹிந்திரா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆனந்த் மஹிந்திராவுக்கு இப்படியொரு அட்வைஸ் கொடுத்துப்புட்டாரே ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!
- கார் வாங்க ப்ளான் பண்றீங்களா..? சீக்கிரமே விலை உயர்த்தப் போகிறதாம் மாருதி சுசூகி
- கார், ஸ்கூட்டர் என வாகன உற்பத்தியில் களம் இறங்கும் Mi நிறுவனம்...! இந்தியாவில் வரவேற்பு கிடைக்குமா?
- பறந்த புகார்... பிறந்த மாற்றம்... இதுதான் மாருதி சுசூகிக்கு அழகு... வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
- மீண்டும் ஏறப்போகும் கார் விலை! புதிய கார் வாங்க போறீங்களா… உடனே பாருங்க..!
- ஆட்டோ கட்டணத்திற்கு வரி.. மத்திய அரசு புதிய உத்தரவு
- VIDEO: கேஷ் 'கையில' வேண்டாம் ப்ரோ...! 'UPI QR கோட்' வழியா பணத்த சென்ட் பண்ணுங்க... - ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த 'வைரல்' வீடியோ...!
- ஒருகாலத்துல 'இங்கிலாந்து'ல கொடிகட்டி வாழ்ந்த மனுஷன்...! 'ஆனா இப்போ ஒரு ரியல் ஹீரோ...' யார் இவர்...? - புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மஹிந்திரா...!
- VIDEO: 'ஹார்ட்பீட்' எகிறியிருக்கும்...! இருட்டுல இருந்து 'மெதுவா' வெளிய வருது...! 'ஹைவேயில் கண்ட நடுங்க வைக்கும் காட்சி...' - ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த 'வைரல்' வீடியோ...!
- வாழ்க்கையில அந்த 'ஒரு ஆசை' மட்டும் நிறைவேறவே இல்ல...! 'யூடியூப்ல ஒரு வீடியோ பார்த்தப்போ தோணின ஐடியா...' - பட்டைய கெளப்பும் அமால் டுமால் ஆட்டோ...!