'மஹிந்திரா கார்கள்னாலே ஒரு தனி ருசிதான்..!'- முதுமலை புலியின் சேட்டையை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்முதுமலை புலி மஹிந்திரா கார் உடன் செய்யும் சேட்டைகளை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
முதுமலை காட்டில் பசியில் புலி ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது. அப்போது காட்டை விட்டு ஊட்டி- மைசூர் சாலை ஓரமாக வந்த புலியைப் பார்த்து வாகனங்கள் அனைத்தும் வரிசைகட்டி நின்றுள்ளன. திடீரென புலி ஒன்று அங்கு நின்றிருந்த ஒரு காரின் பின் பகுதியில் உள்ள ப்ளாஸ்டிக் கார்டு பகுதியைக் கடிக்கத் தொடங்கியது.
தன் வலுவைக் கொடுத்து அந்தப் புலி இழுத்து கடிக்க கார் மெல்ல பின்னே நகரந்தது. காரின் எடையையே புலி வாயால் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தது. அந்த ப்ளாஸ்டிக் பகுதி உடைந்தது ஆனால் புலியால் அதை சாப்பிட முடியாததால் அப்படியே விட்டுவிட்டு நகர்ந்துவிட்டது.
புலி கடித்து இழுத்த அந்த கார் மஹிந்திராவின் சைலோ கார். இதனால் இந்த வீடியோவை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். தனது ட்வீட்-ல் ஆனந்த் மஹிந்திரா, "ஊட்டி- மைசூர் சாலையில் தெப்பக்காடு அருகே இருக்கும். அந்தக் கார் சைலோ. அந்தப் புலி காரை கடித்து மெல்லுவதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யமே இல்லை. என்னோட கருத்தைத் தான் அந்தப் புலியும் சொல்கிறது. மஹிந்திரா கார்கள் எப்போதுமே ஒரு தனி ருசிதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புலி கடித்துக் கொண்டிருக்கும் போதே பின்னாடி மற்றொரு புலி வருகிறது. புலி சுவைத்துக் கொண்டிருக்கும் காருக்குள்ளும் சுற்றி நிற்கும் காருக்குள்ளும் பயணிகள் நிறைய பேர் இருக்கின்றனர். சிறிது நேரத்தில் புலிகள் சென்றுவிட்டதாகவே கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மன உறுதியுடன் வேலை.. மாற்றுத்திறனாளியால் நெகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா.. பதிலுக்கு சொன்ன விஷயம் தான் சர்ப்ரைஸ்
- தண்டவாளத்தில் போகும் பஸ், ரோட்டில் போகும் ரயில்..! குழப்பமா இருக்கா? அப்டி ஒரு வாகனம் தாங்க இது!
- கார் லோன் வாங்கியவர்கள் 'இதை' செய்ய மறப்பதால் ஏற்படும் சிக்கல்..!
- வேறலெவல் செய்த ஆனந்த் மகேந்திரா... வில்லேஜ் விஞ்ஞானிக்கு செம்ம சர்ப்ரைஸ்..!
- ஆனந்த் மஹிந்திராவுக்கு இப்படியொரு அட்வைஸ் கொடுத்துப்புட்டாரே ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!
- கார் வாங்க ப்ளான் பண்றீங்களா..? சீக்கிரமே விலை உயர்த்தப் போகிறதாம் மாருதி சுசூகி
- கார், ஸ்கூட்டர் என வாகன உற்பத்தியில் களம் இறங்கும் Mi நிறுவனம்...! இந்தியாவில் வரவேற்பு கிடைக்குமா?
- பறந்த புகார்... பிறந்த மாற்றம்... இதுதான் மாருதி சுசூகிக்கு அழகு... வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
- மீண்டும் ஏறப்போகும் கார் விலை! புதிய கார் வாங்க போறீங்களா… உடனே பாருங்க..!
- ஆட்டோ கட்டணத்திற்கு வரி.. மத்திய அரசு புதிய உத்தரவு