நெகிழ்ந்து போய் நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் வீரர்.. பேச வார்த்தைகளின்றி உருகி போன ஆனந்த் மகிந்திரா
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்மாற்றுத் திறனாளிகள் எளிதாக காருக்குள் செல்லும் விதமான காரை வடிவமைத்த மகிந்திரா நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய இளம் மங்கை அவனி லெகரா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய இளம் மங்கை அவனி லெகராவுக்கு, மஹிந்திரா நிறுவனம் எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் காரை பரிசாக அளித்துள்ளது.
கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில், 10 மீட்டர் ஏர்ரைபிள் எஸ்.எச்1 எனும் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அவனி லெகரா, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தப் பிரிவில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுதந்தவர் என்றப் பெருமையையும், அவனி லெகரா பெற்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஸ்டாண்டிங் எஸ்.எச்-1 துப்பாக்கி சுடுதல் பிரிவில், 249.6 புள்ளிகள் பெற்று புது சாதனையும் படைத்தார்.
இந்நிலையில், விளையாட்டு உள்பட பல துறைகளில் வித்தியாசமாக சாதனை படைக்கும் நபர்களுக்கு, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் கார்களை பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்தவகையில், ஏற்கனவே அறிவித்தப்படி, மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையில் சிறப்பான அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய, மஹிந்திரா எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் காரை மஹிந்திரா நிறுவனம், வீரமங்கை அவனி லெகராவுக்கு பரிசளித்துள்ளது.
இதனை மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்ற ஆண்டு ஒலிம்பிக்பில் ஈட்டி எறிதல் போட்டியில் சாதித்த நீரஜ் சோப்ரா மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதித்த சுமித் பாட்டீல் ஆகிய இருவருக்கும் மஹிந்திரா எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுபோன்ற கார்களை தொடர்ச்சியாக தயாரிக்க வேண்டும் என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நிறவனத்தில் தயாரிக்கப்படும் கார் குறித்த கருத்துக்களை யார் பகிர்ந்தாலும் அதை அவர் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
ஜெயிக்குறமோ, தோக்குறமோ.. மொதல்ல சண்டை செய்யணும்.. அதுக்கு இந்த பையன் தாங்க உதாரணம்.. ஏன் தெரியுமா..?
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: டூர் போனவர்களின் காரை புரட்டிப்போட்ட காட்டு யானை.. அலறிய குடும்பம்.. பதற வைத்த வீடியோ..!
- தமிழ்நாட்டில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா? வாங்க.. வாங்க.. நம்ம பசங்கலாம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க!
- "அய்யோ.. அத்தன காய்கறியும் வீணாச்சே".. நடுரோட்டில் அடிவாங்கியபடி.. கதறி அழுத 'பெண்' வியாபாரி!
- 'போடா டேய்'.. தமிழில் ஆனந்த் மகேந்திரா போட்ட ட்வீட்.. பொங்கல் அதுமா.. தமிழர்களை இப்படி நெகிழ வச்சுட்டாருப்பா
- VIDEO: காரில் இருந்து இறங்கி வந்து.. 'பப்பாளி' பழங்களை நடுரோட்டில் வீசிய பெண்.. கலங்கி போன பழக்கடைக்காரர்.. நடந்தது என்ன?
- ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்... ஒரே நாளில் உலக பேமஸ் ஆன கொல்லிமலை
- 'மஹிந்திரா கார்கள்னாலே ஒரு தனி ருசிதான்..!'- முதுமலை புலியின் சேட்டையை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!
- மன உறுதியுடன் வேலை.. மாற்றுத்திறனாளியால் நெகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா.. பதிலுக்கு சொன்ன விஷயம் தான் சர்ப்ரைஸ்
- வேறலெவல் செய்த ஆனந்த் மகேந்திரா... வில்லேஜ் விஞ்ஞானிக்கு செம்ம சர்ப்ரைஸ்..!
- என்னது?.. இவ்ளோ செலவாகுமா?.. கடுப்பில் 'டெஸ்லா' காரை வெடிக்க வைத்த 'உரிமையாளர்'.. வைரல் 'வீடியோ'..