Anand mahindra | பழைய வண்டிய வாங்கிட்டு belora வை தூக்கி கொடுத்த ஆனந்த் மகிந்திரா.. நெகிழ வைத்த பின்னணி

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு மகேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தங்கள் நிறுவனத்தின் காரை பரிசாக அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

சொந்தமாக கார் உருவாக்கிய மனிதன்:

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தத்தாத்ராய லோகர் என்பவர் தன் மகனின் கார் வாங்கும் ஆசையை நிறைவேற்றுவதற்காக தானே சொந்தமாக ஒரு காரை வடிவமைத்துள்ளார். இந்த காரை தன் வீட்டில் இருந்த பழைய உலோக பொருள்கள் மற்றும் துணி, கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தி தயாரித்துள்ளார்.

வெகுவாக பாராட்டி ஒரு ட்வீட்  செய்த ஆனந்த் மகிந்திரா:

இந்த காரை தயாரிப்பதற்கு மட்டும் அவர் சுமார் ரூ.60,000 செலவு செய்திருந்தாராம். சில வாரங்களுக்கு முன்பு இவர் குறித்தான செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகியது. இதனை அறிந்த மகேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தத்தாத்ராய லோகரை வெகுவாக பாராட்டி ஒரு ட்வீட் செய்திருந்தார்.

பர்வத மலை செல்லும் வழியில் இருந்த ஒரு மரம்.. அதில் பக்தர்கள் கண்ட நடுங்க வைக்கும் காட்சி

பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்:

அதில், 'இந்த கார்  தெளிவான விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் உருவாக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் நம் மக்களின் புத்தி கூர்மை மற்றும் திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்' என ஆனந்த் மகேந்திரா குறிப்பிட்டு இருந்தார்.

1945-ல் மாயமான விமானம்.. இத்தனை வருஷமா 'இங்க' தான் கெடந்துச்சா? வியக்க வைக்கும் ஆச்சரியம்

பொலேரோ கார் பரிசு:

அதுமட்டுமில்லாமல் தற்போது அவருக்கு ஒரு எக்ஸ்சேன்ஞ் ஆஃபரையும் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் தத்தாத்ராய லோகர் உருவாக்கிய காருக்கு பதிலாக தன் நிறுவனத்தின் பொலேரோ காரை ஆஃபராக கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள்  தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தன் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்த ஆனந்த் மகேந்திரா, 'தத்தாத்ராய லோகர் உருவாக்கிய வாகனம் ஓட்டுவதற்கான விதிமுறைகளை மீறுவதால் உள்ளூர் அதிகாரிகள் விரைவில் அந்த வாகனத்தை தடைசெய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே, நான் தனிப்பட்ட முறையில் அவருக்குப் பொலேரோ காரை  வழங்கினேன். 'வளம்' என்பது குறைந்த வளங்களைக் கொண்டு அதிகம் செய்வதைக் குறிக்கும் என்பதால், அவரது உருவாக்கம் நம்மை ஊக்குவிக்கும்' என தெரிவித்துள்ளார்.

ANAND MAHINDRA, BOLERO CAR, ஆனந்த் மகேந்திரா, ஆனந்த் மகிந்திரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்