கடல் நீரில் லிட்டருக்கு 98 கிமீ மைலேஜ் தரும் வாகனம்... 13 வயது மதுரை சிறுவனின் உலக சாதனை!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

மதுரையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் கடல் நீரைக் கொண்டு இயங்கும் இரு சக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளான்.

Advertising
>
Advertising

மதுரை சத்திரசேகர் - தங்கமணி தம்பதியர் மகன் அகிலேஷ் "International Warsaw Invention Show" எனும் சர்வதேச அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்றார். 13 வயது ஆகும் அகிலேஷ் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சென்னையில் கேளம்பாக்கத்தில் அறிவியல் ஆய்வு மற்றும் பயிற்சி மையம் ஒன்றில் அறிவியல் சார்ந்த பயிற்சிகளை பெற்று வந்தார் அகிலேஷ்.

கடல் நீரில் இருக்கும் ஹைடரஜென் மற்றும் ஆக்சிஜன் அணுக்களை பிரித்து, ஹைடரஜென் வாயுவை எரிபொருளாக மாற்றி இரு சக்கர வாகனத்தை இயங்க வைத்துள்ளான் இந்த சிறுவன். ஒரு லிட்டர் எரிபொருளுக்கு சுமார் 98 கி.மீ மைலேஜ் தரும் வாகனம் ஆக அகிலேஷின் கண்டுபிடிப்பு உள்ளது.

போலாந்து நாட்டில் நடந்த International Warsaw Invention Show என்னும் சர்வதேச அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. இதில் உலக அளவில் இருந்து சுமார் 400-க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் அகிலேஷ் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

இதுபோக கனடா நாட்டிலிருந்து கண்டுபிடிப்புக்கான ஒரு சிறப்பு விருதும் ரொமேனியா நாட்டில் இருந்து ஒரு சிறப்பு விருதையும் பெற்றுள்ளார் அகிலேஷ். சிறுவனின் கண்டுபிடிப்புக்கு சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்து திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, அகிலேஷின் கண்டுபிடிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து தமிழ்நாட்டில் இந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும் வகையில் உதவ கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

BIKERS, GOOD MILEAGE, 13 YEAR OLD, SCOOTER, 98 கிமீ மைலேஜ், 13 வயது மதுரை சிறுவன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்