தமிழகத்தின் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று காலை 7.47 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில அதிர்வினால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் இந்த நிலநடுக்கம் சேலத்தை மையமாகக் கொண்டு புவிக்கு அடியில் 15கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர்ப் பகுதிகளிலும் மற்றும் மாவட்டத்தின் ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, மேட்டூர், நங்கவல்லி, சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டத்தின் பெண்ணாகரம், ஏரியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 22, 2018 11:16 AM #EARTHQUAKE #TREMORS #SALEM #DHARMAPURI #TAMIL NADU NEWS