வாடிக்கையாளர் ஆர்டர் பண்ணும் உணவு வழியில் படும் பாட்டை பாருங்கள்.. வைரல் வீடியோ!
Home > தமிழ் news‘கெட் யுவர் ஃபேவரைட் டிஷ்ஷஸ்.. ஆர்டர் ஆன்லைன் ஆன் ஸொமாட்டோ’என்பதுதான் ஸொமாட்டோ உணவு நிறுவனத்தின் டேக்லைன். ஹீக்லைன் எல்லாமே. வாடிக்கையாளர்களிடைடே நன்மதிப்பைப் பெற்றுவிட்ட, மிக குறைந்த உணவு டெலிவரி முதன்மையான நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் ஸொமாட்டோ ஊழியர் ஒருவரின் செயல்தான் தற்போது அனைவரிடையே வைரலாகி வருகிறது.
யுனிஃபார்மில் இருந்த ஸொமாட்டோவின் ஊழியர் ஒருவர், மதுரையில் டெலிவரிக்கு கொண்டுபோகும் உணவை வழியில், தனது இருசக்கர வாகனத்தில் நின்று சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அவற்றை சரியாக பேக் செய்துவிட்டு வைக்கிறார். அதை பொதுமக்களுள் ஒருவர் வீடியோ பிடித்து ட்விட்டரில் பதிவிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். பொதுவாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது வாடிக்கையாளர் கொள்ளும் நம்பிக்கைதான் அவர்களின் முதல் முதலீடு. உணவு தயாரிக்கப்படும் விதங்கள் தொடங்கி, வாடிக்கையாளர்கள் கையில் வந்து உணவு டெலிவரி செய்யப்படுவது வரை, பெரிய பங்கு வகிக்கும் முக்கியமான ஆள் டெலிவரி பாய்தான். இந்த நிலையில் ‘கூப்பனில் ஆர்டர் செய்தால் இதுதான் நடக்கும்’ என்கிற விமர்சன வாசகத்துடன் இருக்கும் இந்த வீடியோவை பலரும், ட்வீட் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் முன்னதாக யூபர் ஈட்ஸ் உணவு நிறுவன ஊழியர் செய்த அதே காரியத்தை இப்போது ஸொமாட்டோ ஊழியரும் செய்துள்ளதால் பலரும் கசப்பான அனுபவத்தை அடைந்துள்ளனர். எனினும் இரவு பகல் பாராது உழைக்கும் ஊழியர்கள் பலரும் உயிரை பணையவைத்து விரைவாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்று சரியான நேரத்தில் குறித்த உணவினை கொண்டுசேர்த்து வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டவும் செய்கிறார்கள்.
ஊழல் செய்பவர்கள் எல்லா துறைகளிலுமே, எல்லா படிநிலைகளிலுமே, எல்லா இடங்களிலுமே இருப்பது மறுக்க முடியாத ஒன்று. ஒரு நல்ல சமையலை அதிகப்படியான உப்பு கெடுத்துவிடுவதுபோல, கறிவேப்பிலை அளவு எண்ணிக்கை கொண்ட ஒரு சில பேரால் அனைத்து ஊழியர்கள் மீதும், உணவு நிறுவனங்கள் மீதும்தான் இதுபோன்ற கரைகள் ஒட்டிக்கொள்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த ஸொமாட்டோ நிறுவனம், குறிப்பிட்ட டெலிவரி பாய் மீது நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இதுபோன்ற காரியம் நிகழ்ந்தமைக்காக வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
This is what happens when you use coupon codes all the time. 😂 Watch till end. pic.twitter.com/KG5y9wUoNk
— Godman Chikna (@Madan_Chikna) December 10, 2018