என்னை முழுமையான மனிதனாக மாற்றியது எனது மகள் ஜிவா தான் என, கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்றது. இதைத்தொடர்ந்து சென்னை வீரர்கள் அனைவரும் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கோப்பையை வென்று கொடுத்த தோனி தனது மகளுடன் நேரம் செலவு செய்வதையே விரும்பினார்.

 

இந்தநிலையில் தனது மகள் ஜிவா குறித்து தோனி சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜிவா குறித்து தோனி கூறுகையில்,"ஜிவா பிறந்தபோது,என்னால் அவளுடன் நேரத்தைச் செலவிட முடியவில்லை. கிரிக்கெட்டிலேயே கவனம் செலுத்தியதால், ஒரு தந்தையாக பல விஷயங்களை நான் இழந்துவிட்டேன்.

 

இதனால் ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்து ஜிவா பயப்படத் தொடங்கிவிட்டார். ஜிவா சாப்பிட அடம்பிடித்தால்கூட அப்பாவைக் கூப்பிடவா என்று என் பெயரைக் கூறினால் பயந்துவிடுவாள், ஏதாவது குறும்பு செய்தால் அப்பாவிடம் சொல்லவா என்று யாராவது கூறினால் பயந்துவிடுவாள். என்னைப் பார்த்தாலே,ஜிவா பயந்து பின்னால் நகர்ந்துகொள்வாள். இதைக் கண்டு வேதனையாக இருந்தது.

 

எனினும் இந்த ஐபிஎல் போட்டி முழுவதும் ஜிவா என்னுடன் இருந்தது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.நான் ஐபிஎல் நிர்வாகத்திடம் முன்வைத்தஒரே வேண்டுகோள், என் மகள் ஜிவாவை மைதானத்துக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு அனுமதியும் கிடைத்தது.அணியில் உள்ள வீரர்களின் குழந்தைகள் ஜிவாவுடன் இணைந்து கொண்டனர்,'' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS