'சென்னை அணிக்கு வருகிறாரா யுவராஜ் சிங்'...ரசிகர்கள் ஆர்வம்...என்ன செய்யப்போகிறார் 'தல'?

Home > தமிழ் news
By |
'சென்னை அணிக்கு வருகிறாரா யுவராஜ் சிங்'...ரசிகர்கள் ஆர்வம்...என்ன செய்யப்போகிறார் 'தல'?

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் யுவராஜ் சிங் விளையாட வேன்டும் என, சென்னை ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.மேலும் யுவராஜ் சிங்கிற்கு இது கடைசி தொடராக அமையலாம் என்பதால்,அவரை ஏலத்தில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது.இதனால் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரர்கள்,எந்த அணியில் விளையாட போகிறார்கள் என ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.அதே நேரத்தில் இந்தியாவில் அடுத்த ஆண்டு,பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது.இதனால் அந்த தேதிகளில் இந்தியாவில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இதனால் இந்தியாவுக்கு வெளியே இத்தொடரை முழுமையாக மாற்றுவதா? அல்லது பாதி தொடரை மட்டும் வெளியே மாற்றுவதா? என பிசிசிஐ பெரும் குழப்பத்தில் உள்ளது.

 

இந்நிலையில், இரண்டு ஆண்டு மேட்ச் பிக்சிங் தடைக்கு பின், சீனியர் அணி என்ற கிண்டலுடன்,மீண்டும் களமிறங்கி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதித்தது.அதே நேரத்தில் வருகிற ஐபிஎல் போட்டிகளுக்காக, இனி எந்த வெளிநாட்டு வீரரையும் ஏலத்தில் எடுக்க முடியாது.

 

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வசம் ரூ.8.4 கோடி உள்ளது.இதனைக்கொண்டு அதிகபட்சமாக இரண்டு இந்திய வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்க முடியும். இதில் சென்னை அணியில் விளையாட விரும்பும் வீரர் யார் என ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடந்தது அதில், பெரும்பாலானோர், யுவராஜ் சிங் பெயரை தேர்வு செய்துள்ளனர்.அவருக்கு அடுத்து மனோஜ் திவாரியையும் தேர்வு செய்துள்ளனர்.

 

அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிற்கு இது கடைசி தொடராக அமையலாம்.இதனால் அவரை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதே போல பவுலர்கள் பட்டியலில், ஜெய்தேவ் உனத்கத், தீபக் சகார் ஆகியோரை,பேட்டிங் பலம் நிறைந்த சென்னை அணிக்கு பவுலிங்கில் பலம் சேர்க்க தேர்வு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.