நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் அணியை, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் பெங்களூர் அணியின் பிளே ஆப் கனவு தற்போது வெகுவாக ஆட்டம் கண்டுள்ளது.
147 ரன்களுக்குள் சன் ரைசர்ஸ் அணியை சுருட்டிய பெங்களூர் அணியால், ஹைதராபாத் அணியின் பவுலிங் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
குறிப்பாக நேற்றைய போட்டியில் விரைந்து ரன்களை சேர்த்த பெங்களூர் கேப்டன் விராட் கோலி(39) ஷாகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.அதன் பின்னர் வெகுவாக சரிந்த பெங்களூர் அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.
ஷாகிப் ஓவரில் விராட் அடித்த பந்து அவருக்குப் பின்னால் நின்றிருந்த யூசுப் பதானின் தலைக்கு மேல் பறந்து சென்றது. எனினும் மனம் தளராத யூசுப் சற்றே எகிறி அந்த பந்தை ஒரு கையால் பிடித்து விராட்டை ஆட்டமிழக்கச் செய்தார்.
தற்போது ரசிகர்கள் இதனை சிறந்த கேட்ச் என்று, சமூக வலைதளங்களில் யூசுப் பதானை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.
— Faizal Khan (@faizalkhanm9) May 7, 2018
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'சில ஆண்டுகளுக்குப்பின் அவரின் சிறந்த பேட்டிங்கை பார்க்கிறேன்' தோனியைப் புகழ்ந்த பிரபலம்!
- Kings XI Punjab send Rajasthan Royals home packing
- Mumbai Indians one up against Kolkata Knight Riders
- ஐபிஎல்லில் 'அதிகம் பின்தொடரப்படும்' அணி இதுதான்!
- 'ஐபிஎல் என்னும் அடர்ந்த காட்டில்'... உலகநாயகன் பாணியில் 'சிஎஸ்கேவை' வாழ்த்திய பிரபலம்!
- கோலியின் விக்கெட்டைக் 'கொண்டாடாதற்கு' காரணம் இதுதான்: ஜடேஜா
- Another fan breaches security to touch the feet of Dhoni
- பெங்களூரை வீழ்த்தி.. புள்ளிப்பட்டியலில் மீண்டும் 'முதலிடத்தைத்' தக்க வைத்தது சென்னை!
- CSK vs RCB: CSK trashes RCB to secure massive win
- CSK vs RCB: Jadeja explains why he didn't celebrate Virat Kohli's wicket