காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினாவில் போராடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என எல்லோரும் தங்களது குரல்களை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மெரினாவில் கூடிய இளைஞர்கள், ‘வேடிக்கை பார்க்கும் தமிழகமே, வீதிக்கு வந்து போராடு’ என்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டுள்ளனர்.
இதனை அறிந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ள இடங்களை காவல்துறை கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- AIADMK MP to resign over non-formation of Cauvery Management Board
- DMK to convene all-party meeting on April 1
- DMK to raise black flag when Narendra Modi comes to TN
- AIADMK to hold fast across Tamil Nadu on April 2
- Kamal Haasan's latest statement on Cauvery Management Board
- AIADMK will never give up Tamil Nadu’s rights on Cauvery: Edappadi Palaniswami
- TN govt to file contempt petition against Centre
- "நீதி வெல்லும் என நான் நம்புகிறேன்": ரஜினிகாந்த்
- Rajinikanth tweets on Cauvery issue
- CM to hold key meeting on Thursday regarding Cauvery Management Board